பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை கண்டது 13

யிலுள்ள அறையிலே தேவாரத் திருமுறைகள் இருத் தலத் தில்லவாழந்தணர்களிடம் தெரிவித்து அவ் வறையைத் திறக்கும்படி வேண்டினன். தேவார ஆசிரியர் மூவருடைய கைகளின் இலச்சினையுடன் பூட் டப்பட்டுள்ள அறையினே அம்மூவரும் வந்தாலன்றித் திறத்தலியலாது எனத் தில்லைவாழந்தணர்கள் கூறி ஞர்கள். உடனே சோழமன்னன் தில்லையம்பல வாணர்க்குச் சிறப்புடைய பூசனை செய்து, தேவார ஆசிரியர் மூவர் திருவுருவங்களுக்கும் வழிபாடியற்றி அத்திருவுருவங்களைத் திருவீதிக்கு எழுந்தருளச்செய்து திருப் பதிகங்கள் சேமித்துவைக்கப்பட்ட அறையின் முன்னர்க் கொண்டுவந்து நிறுத்தி, மூவரும் வந்த னர் அறையினத் திறந்திடுமின் எனப்பணித்தான். அரசனது ஆணையால் அறை திறக்கப்பட்டது. அவ் வறையினுள்ளே சென்று பார்த்தபொழுது தேவாரப் பதிகங்கள் எழுதப்பெற்ற ஏடுகள் கரையான் புற்றல் மூடப்பட்டுச் சிதைந்த நிலையிலிருந்தன. புற்று மண் குல் மூடப்பட்டுள்ள அவ்வேடுகளின்மேல் எண்ணெ யைச் சொரிந்து அவற்றைப் புறத்தே கொணர்ந்து எடுத்துப்பார்த்த அளவில் அவற்றுட் பெரும்பாலான ஏடுகள் பழுதுபட்டிருந்தன. மன்னன் அளவிலாத் துயரமுற்ருன். அந்நிலையில் ' தேவாரப் பதிகங்களிலே இக்காலத்துக்கு வேண்டுவனவற்றை மா த் தி ர ம் வைத்துவிட்டு மற்றவைகளேச் செல்லரிக்கச் செய் தோம்’ என்றதொரு அருள்வாக்கு அங்குள்ளாரனே வரும் கேட்கத் தோன்றியது. அதனேயுணர்ந்த வேந் தன் ஒருவாறு ஆறுதலடைந்து, செல்லரிக்காது எஞ்சி யுள்ள திருப்பதிகங்களை மட்டும் சிதையாமலெடுத்து முன்போலத் தொகுத்துத் தரும்படி நம்பியாண்டார் நம்பியை வேண்டிக்கொண்டான். நம்பியும் மன்னனது வேண்டுகோளுக்கிசைந்து, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களே முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசு