பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 罗97

ஆற்றிலிட்டுக் குளத்தில் எடுத்தல்

திருமுதுகுன்றத் திறைவரை யிறைஞ்சிய நம்பியா ரூரர், நஞ்சியிடையின்று என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகத்தைப்பாடி இறைவன் பால் பொருனே வேண்டிப் பெறும் மனக்குறிப்புடன் மெய்யில் வெண் பொடி' என்னும் செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடினர். ' அப்பொழுது திருமுதுகுன்றப் பெருமான் நம்பியா ரூரர்க்குப் பன்னிராயிரம் பொன் களேப் பரிசிலாகத் தந் தருளினர். அவற்றைப் பெற்ற ஆளுடையதம்பி மீண் டும் இறைவரைப் பணிந்து தேவரீர் தந்தருளிய இப் பொன்கள் யாவும் அடியேற் குத் திருவாரூரிலுள்ளார் வியக்கும் வண்ணம் அங்கே வரும்படி செய்தல் வேண் டும் என வேண்டிக்கொண்டார். அப்பொழுது இப் பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க்குளத்தில் எடுத்துக்கொள்க’ என்ற தோர் அருள் வாக்கு எழுந்தது. அவ்வருள்மொழியைச் செவிமடுத்த வன்ருெண்டர், தாம் பெற்ற பொன்னின் மாற்றறிதற்கு மச்சம் வெட்டி எடுத்துக்கொண்டு பொன் முழுவதையும் மணிமுத்தாற்று நீரினுள்ளே புகவிட்டு, அன்று என்னே வலிய ஆட்கொண்ட திரு வருளே இதில் அறிவேன்’ என்று சொல்லித் தில்லேக் கூத்தனேக் கண்டு கும்பிடும் பேரார்வத்துடன் அங்கி ருந்து புறப்பட்டார். கடம்பூரை யிறைஞ்சித் தில்லைப் பதியை யடைந்தார். திருவீதியை வலம் வந்து கோபு ரத்தை யிறைஞ்சி உள்ளே புகுந்து பொன்னம்பலத் தில் ஆடல்புரியும் பெருமானே ஆர்வமுறக் கண்டு

1. இப்பொழுது கிடைத்துள்ள சுந்தரர் தேவாரத்துள் இம் முதற் குறிப்புடைய பதிகமோ பாடலோ காணப்பெற வில்லே. மெய்யை முற்றப்பொடி பூசியோர் நம்பி’ எனவரும் நம்பியென்ற திருப்பதிகமே இங்கு மெய்யில் வெண்பொடி எனச் சேக்கிழாரடிகளாற் குறிப்பிடப்பெற்ற கொள்ள. தல் பொருந்தும்.