பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

பன்னிரு திருமுறை வரலாறு

ஆளும் பூதங்கள் பாடநின்ருடும்

அங்கனன்றன யெண்கண மிறைஞ்சுச்

கோளிலிப் பெருங்கோயிலுளானேக்

கோலக்கா வினிற் கண்டுகொண்டேனே

எனவரும் திருப்பாடலிற் போற்றிசைத்துப் பரவினர்.

இறைவன் பொதிசோறளித்தருளல்

பின்பு சீகாழிப்பதியைப் புறத்தே வலம்வந்து வணங்கி நின்று அத்திருப்பதியில் திருவவதாரஞ் செய் தருளிய முத்தமிழ் விரகராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவடிகளைப் பரவிப் போற்றிக் குருக வூர் என்னுந் திருப்பதியை நோக்கிச் செல்வாராயினர். அங்ங்ணம் செல்லும் வன் ருெண்டர் பசியாலும் நீர் வேட்கையாலும் வருந்துதலேயுணர்ந்த சிவபெருமான், வழியிடையே மறையவர் வடிவுடன் தண்ணிரும் பெ திசோறுங் கொண்டுவந்து வெயில் வெப்பம் நீங்க நிழல் தரும் பந்தரையும் உண்டாக்கி நம்பியாரூரரை எதிர்பார்த்திருந்தார். அப்போது சுந்தரர் அடி யார் திருக்கூட்டத்துடன் அவ்விடத்தே வந்து பந்தரின் கீழேபோய் அங்குள்ள அந்தணர் பக்கத்திலே 'சிவாயநம எனத் திருவைந்தெழுத்தோதி அமர்ந் தார். அந்தணராய் வந்துள்ள சிவபெருமான் அவரை நோக்கி நீவீர் மிகவும் பசியுடையவராக வுள்ளிர். யான் கொண்டுவந்த இப் பொதிசோற்றையுண்டு தண் ணtர் பருகி இளேப்பாறுவீராக’ என வேண்டிக்கொண் டார். சுந்தரரும் அதற்கிசைந்து அவர் அன்புடன் தந்த பொதிசோற்றை வாங்கி அடியார்களுடன் அ முது செய்து உடன்வந்த பரிசனங்களெல்லோரும் உண் ணும்படி செய்தார். அறவாழியந்தணகிைய இறைவ னளித்த பொதிசோறு யாவரும் உண்ணும்படி குறை யாது பெருகியது. உண்டு பசிதீர்த்த வன்ருெண்டர், உரிய நேரத்தில் உணவளித்து உய்வித்த மறைய வரைப் பாராட்டி அடியார்களுடன் அருகே துயிலமர்ந் தார். அந்நிலையில் மறையவராய் வந்த இறைவர்,