பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பன்னிரு திருமுறை வரலாறு


நாயனர் அருளிச் செய்த திருப்பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறு என மூன்று திருமுறைகளாகவும், சுந்தர மூர்த்தி நாயனர் அருளிச் செய்த திருப்பதிகங்களே ஏழாந் திருமுறையென ஒன்ருகவும் வகுத்தருளிர்ை.

இவ்வாறு தேவாரத் திருப்பதிகங்களே ஏழு திரு முறைகளாக வகுத் த பின்பு, மாணிக்கவாசக சுவாமி கள் அருளிச் செய்த திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரண்டு நூல்களையும் எட்டாந் திருமுறை யாகவும், திருமாளிகைத் தேவர், சேந்தனர், கருவூர் த் தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணுட்டடிகள், திருவாலியமுதர், புருடோத்தமநம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மர் பாடிய திருவிசைப் பாப் பதிகங்கள் இருபத்தெட்டும், அவருள் சேந்தனுர் பாடிய திருப் பல்லாண்டாகிய பதிகம் ஒன்றும் ஆக இருபத்தொன்பது பதிகங்களையும் ஒன்பதாந் திருமுறை யாகவும், திருமூல நாயனர் அருளிச் செய்த திருமந் திரப் பாடல்களேப் பத்தாந்திருமுறையாகவும், தி ரு வாலவாயுடையார் திருமுகப் பாசுரம் முதலிய பிர பந்தங்களைப் பதினெராந் திருமுறையாகவும் வகுத் தருளினர்.

இங்ங்னம் திருமுறைகளே வகுத்த நம்பியாண்டார் நம்பி, தமக்குப் பொல்லாப் பிள்ளையார் உபதேசித் தருளிய வண்ணம் திருத்தொண்டத் தொகையை முதனூலாகக் கொண்டு, தனியடியார் அறுபத்துமூவ ரும் திருக்கூட்டத்தாராகிய ஒன்பது தொகையடியார் களும் ஆகிய திருத்தொண்டர்களின் தொண்டுகளேயும் அத்தொண்டுகளால் அவர்கள் பெற்ற பேறுகளேயும் கட்டளைக் கலித்துறையாப்பினல் அந்தாதியாக அரு ளிச் செய்தார். பின்னர்த் திருஞானசம்பந்தப் பிள்ளே யார் மீது திருவந்தாதி, திருச் சண்பை விருத்தம், திரு மும்மணிக்கோவை, திருவுலாமாலே, திருக்கலம்பகம்,