பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 303

பந்தருடன் மறைந்தருளினர். துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், மறையவரைக் காணுது அதிசயித்து, இவ் வாறு வந்து அருள்புரிந்தவர் குருகாவூரிற் கோயில் கொண்டருளிய சிவபெருமானேயெனத் தெளிந்து,

இத்தனே யாமாற்றை யறிந்திலே னெம் பெருமான் பித்தரே யென்றும்மைப் பேசுவார் பிற ரெல்லாம் முத்தினே மனிதன்னே மாணிக்க முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே என வரும் திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு திருக் குருகாவூரை யடைந்து உணவளித்து உயிர்காத்த பெருமானே அன்பிறை போற்றி மகிழ்ந்தார். உளங் குளிர்ந்து பாடிய தமிழ் மாலேயாகிய இத்திருப்பதி கத்திலே,

ஆவியைப் போகாமே தவிர்த்தென்னே யாட் கொண்டாய்” எனவும்,

‘பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளே வாய்?

எனவும் நம்பியாரூரர் குருகாவூரிறைவர் தமக்கு அருள் செய்த திறத்தைப் பத்தர்கட்குக் குறிப்பிட்டுப் போற்று தல் இந் நிகழ்ச்சிக்குரிய அகச்சான்ருதல் காணலாம்.

குருகாவூர்ப் பெருமானே வழிபட்ட சுந்தரர், திருக் கழிப்பாலேயை யிறைஞ்சித் தில்லேயை யடைந்து தில்லைச் சிற்றம்பலவன் திருக் கூத்தினைக் கண்டு கும்பிட்டு எல்லேயிலா இன் பத்தில் தி%ளத்து மகிழ்ந் தார். பின்பு, திருத்தினை நகரை வணங்கித் தாம் பிறந்த தலமாகிய திருநாவலு ரை யடைந்தார். தம் ஆவியினும் அடைவுடைய சிவபெருமான் திருவடி களே இறைஞ்சிக் கோவலன்ைமுகன்’ என்ற திருப் பதிகத்தினைப் பாடிப் போற்றி அடியார்களுடன் அப் பதியில் அமர்ந்திருந்தார்.

தொண்டை நாட்டு யாத்திரை

தொண்டைநாட்டுத் திருத் தலங்களே வழிபட விரும் பிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருநாவலூரினின்றும்