பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 307

பேசியது கேட்டு அயலே நின்ற சங்கிலியார், இவர்கள் பேசும் இவ்வார்த்தை என் திறத்துப் பொருந்தாது. ஈசன ருள் பெற்ருர் ஒருவர்க்கே யான் மனேவியாதற்குரி ய்ேன். என் கருத்துக்கு மாருக யாது விளையுமோ என மனங் கலங்கி மூர்ச்சித்து நிலமிசை விழுந்தார். அது கண்டு தந்தையும் தாயும் பதைபதைத்தோடித் தம் மகளாகிய சங்கிலியைக் கைகளால் த்ாங்கியெடுத்து முகத்திற் பனிநீர் தெளித்து மூர்ச்சை தெளிவித்து “நினக்கு நிகழ்ந்த துன்பம் யாது’ என வினவினர். உணர்வு தெளியப்பெற்ற சங்கிலியார், "என் தாயும் தந்தையுமாகிய நீங்கள் இப்பொழுது என் திருமணத் தைக் குறித்துப் பேசிய இவ்வுரை எனக்கு ஏற்புடைய தன்று. சிவபெருமான் அருள்செய்த ஒருவரை யான் மணத் கற்குரியேன். இ னி மே ல் திருவொற்றியூரை யடைந்து இறைவன் திருவருளிற் செல்வேன் ' என மறுமொழி பகர்ந்தார். அவரது மனக்கருத்தறிந்த தந்தையும் தாயும் சோர்வுற்று அச்சமும் வியப்பும் உடையவர்களாகித் தம் மகள் சொன்ன அவ்வார்த்தை யினே உலகத்தார் அறியாமல் மறைத்தொழுகினர்கள்,

இந்நிலையில், அவர்களோடு குலத் தால் ஒப்புடைய ஒருவன், சங்கிலியாரது தகுதியை யுணராதவனுய் அவரை மணந்துகொள்ள விரும்பி அவருடைய தந்தை யார்பால் மகட் பேசி வருவதற்குச் சிலரை யனுப் பினன். அவர்கள் ஞாயிறு கிழவரை யடைந்து சங்கிலியாரை மணம்பேசியபொழுது அவருடைய தந்தையார், தம்முடைய மகளது மனக்கருத்தினை வெளியிடுதல் தகுதியன்றென நினேந்து, தீங்கு நேராத படி வேருெருவகையால் சமாதானங் கூறி அனுப்பி விட்டார். இவ்வாறு பெண் கேட்க வந்தவர்கள் திரும்பிச் செல்வதற்கு முன்னமே அவர்களே யனுப்பி யவன் அங்கு வந்து சால்புமிக்க சங்கிலியாரை இகழ்ந் துரைப்பாயிைன். அவனது அடாச் செய்கை கண்டு