பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 309

இங்ங்ணம் நிகழ்ந்து வரும் நாட்களிலே ஒற்றியூர்ப் பெருமானே வழிபட்டு மகிழும் சுந்தரமூர்த்தி சுவாமி கள், ஒரு நாள் அடியார்கள் செய்யும் பலவகைத் திருத் தொண்டுகளையும் கண்டு வருபவராகி மலர் மாலே தெ டுக்கு ந் திருமண்டபத்தை அணுகினர் அப் பொழுது இறைவனுக்குச் சாத்தும்படி தாம் கட்டிய மலர் மாலேகளைக் கொடுத்துவிட்டு மி ன் ன ற் .ெ கா டி போன்று திரையினுள்ளே மறையும் சங்கிலியாரை இறைவனருள் கூட்டிய நல்விதியாற் கண்ணுற்ருர், சங்கிலியா ரைக் கண்டு காதல்கொண்ட சுந்தரர், மலர் கொடுக்கும் மண்டபத்தை நீங்கிப் புறத்தே ஒருபாற் போந்து என்னே உள்ளம் திரிவித் தாள் இவள் யார் கொல் என வினவினர். அதனேக் கேட்டு அருகே நின்றவர்கள் அவர் தாம் நங்கை சங்கிலியார். பெருகுந் தவத்தால் சிவபெருமானுக்குரிய திருப்பணிபுரியும் கன்னியார் எனப் பகர்ந்தனர். அம்மொழிகேட்ட சுந்தரர், மகளிர் இருவர் காரணமாக இப்பிறவியை இறைவர் எனக்கு எய்துவித்தருளினர். அவ்விருவருள் ஒரு த்தி நங்கை பரவை, மற்றையவள் சங்கிலியாகிய இந்நங்கை என மன மருண்டார். இவளேச் சிவபெரு மான்பால் வேண்டிப்பெறுவேன் ’ என த் துணிந்து ஒற்றியூர்ப் பெருமான் திருமுன் சென்ருர் மங்கை பங்கராயிருந்தும் கங்கையைச் சடையிற் கரந்தருளுங் காதலுடைய பெருமானே, இத்திருக்கோயிலில் நுமக் குத் திருமாலே தொடுத்து என் உள்ளத்தை நெகிழ் வித்த சங்கிலியைத் தந்தருளி எனது துயரத்தைத் தீர்த்தருள்வீராக எனக் குறையிரந்து வேண்டித் திருக்கோயிலின் புறத்தேபோய் ஒருபக்கத்தே கவலே யோடு அமர்ந்திருந்தார். அந்நிலையில் ஞாயிறு மறைய இரவுப்பொழுது வந்தெய்தியது. அப்பொழுது ஒற்றியூ ரிறைவர் வன்றெண் டரை யடைந்து இவ்வுலகத்தவர் யாவராலும் அடை தற்கரிய த வ ச் .ெ ச ல் வி ய கி ய சங்கிலியை உனக்கு மணஞ்செய்து தருவோம். நீ