பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

பன்னிரு திருமுறை வரலாறு


யும் உடையவர்களாய்ச் சங்கிலியாரை வணங்கினர் கள். அந்நிலேயில் இறைவர்க்குத் திருப்பள்ளி யெழுச் சியில் திருமாலே தொடுத்தற்குரிய வைகறைப் பொழு தும் வந் தெய்தியது. சங்கிலியார் சேடியர்களுடன் ஒற்றியூர்த் திருக்கோயிலுக்குச் சென் ருர். சங்கிலியார் செல்வதற்கு முன்னரே அவர்க்குச் சபதஞ்செய்து கொடுத் தற்பொருட்டு அவரது வருகையை எதிர்பார்த் திருந்த சுந்தரர், சேடியருடன் வந்த சங்கிலியாரருகே சென்று தமக்கு இறைவன் அருளிச் செய்தவற்றை எடுத்துரைத்தார்.

சங்கிலியார் நாணத்தால் மறமெரழி கூறமாட்டாது ஒருபுறத்தே ஒதுங்கித் திருக்கோயிலுட் செல்வா ராயினர். சுந்தரர் அவரைத் தொடர்ந்து பின் சென்று 'இங்கு நான் உம்மைப் பிரியேன் எனச் சபதஞ் செய் தற்பொருட்டு இறைவன் திருமுன்னர் வருவீராக’ என அழைத்தார் சங்கிலியார் கண்ட கனவில் நிகழ்ந்த வற்றைக் கேட்டறிந்த பாங்கியர்கள் சுந்தரரை நோக்கி, தேவரீர், இதற்காக இறைவன் திருமுன்பு சென்று சபதஞ் செய்வது தகாது என் ருர் கள் அந் நிலையில் நம்பியாரூரர் இறைவனது செய்கையை யறி யாது மங்கை மீர், நான் வேறு எங்கே சபதஞ் செய்து தரவேண்டும்’ என வினவ, இங்குள்ள மகிழமரத்தடி யிலேயே சபதஞ் செய்தாற்போதும் என அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள். அது கேட்ட வன்ருெ ண் டர் மனமருட்சியுடை யராய் இவர்கள் சொல்லியதை மறுத்தால் திருமணம் நிகழாது தடைப்படுதலுங் கூடும். எனவே இதற்கு உடன்படுதலே த கதி’ எனத் துணிந்து 'அவ்வாறே செய்யலாம் வாருங்கள் என்று அவர்களே யழைத்துக் கொண்டு அவர்களோடு மகிழின் கீழ்ச் சென்று அந்த மகிழமரத்தை மூன்றுமுறை வலம்வந்து சங்கிலியாரை நோக்கி இங்கு உன்னேப் பிரியேன்” எனச் சபதஞ்செய்து கொடுத்தார். இவ்வாறு திருநாவ