பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

பன்னிரு திருமுறை வரலாறு


அவன் அங்ஙனம் இறந்து போகவே அங்ங்னம் மகட் பேச விரும்பிய பிற ஆடவர்களும் பெரிதும் அச்சமுற்று. மனம் பேச முன் வராமையால் சங்கிலியார்க்கு மங்கல நூலணிதலாகிய திருமணம் தடைப்பட்டதென்பதும், கற்றுத்துறைபோய பொற் ருெடி நங்கையாகிய சங்கிலி யாரைத் திருவொற்றியூர்த் திருக்கோயிலிற் கண்டு காதல் கொண்ட திருநாவலூரர் அந் நங்கையை மணந்து கொள்ள வேண்டுமென் னும் பெருங்காதலால் ஒற்றியூர்ப் பெருமானே ப் பணிந்து அவனது திருவருட்டுனே கொண்டு சங்கிலியாரை மணந்து கொண்டாரென் பதம், இத்திருமணத்தால் இருமனே வி யாளன் இடர்ப்பாடு என உலகத்தார் இகழ்ந்துரைத் துச் சிரிக்கும் வண்ண ம் தமக்கு ஏற்பட்ட துன்ப நிலை வினேயும் இனிமைதரும் நல் வாழ்வாக நம்பியாரூரர் இறைவனருளால் மாற்றியமைத்துக் கொண்டாரென் பதும்,

தகு கட் பேசினேன் வீயவே நூல்போன சலிங்கிலிபாற் புகுமணக் காதலினலொற்றி யூருறை புண்ணியன்றன் மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளா லிவ் வியனுலகம் நகும் வழக்கே நன்மையாப் புணர்ந்தான் நாவலூரரசே,

என வரும் நம்பியாண்டார் நம்பி வாய்மொழியால் இனிது புலனுகும். தம்பிரான் தோழராகிய நம்பியா ரூரர்க்கு வாழ்க்கைத் துணையா தற்கேற்ற தகுதியுடைய சங்கிலியாரைத் தனக்கு மணம் பேசிய அளவிலமை யாது அவரை இகழ்ந்துரைத்தலாகிய தீமையைச் செய்தமையால் திடுமென இறந்தொழிந்தான் என் பார் "தகுமகட் பேசினேன் வீயவே என்ருர் ஈண்டுப் பேசுதல் இகழ்ந்துரைத்தல். பேசின பேச்சைப் பொறுத்தில ரா கில் இவரலாதில்லையோ பிரானுர் ’ என் புழிப் பேசுதல் இப்பொருட்டாதல் காண்க. இங்ங்னம் தகுதியுடைய சங்கிலியாரை மணம் பேசும் நிலையில்