பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 忍盛器

கோட்டம் என்னுந் திருக்கோயிலேயிறைஞ்சி அறப் பெருஞ்செல்வியாகிய அன்னேயின் திருவடிகளைத் துதித்து வணங்கித் திருவேகம்பம் என்னும் ஏகாம்பர நாதர் கோயிலே யடைந்தார். கச்சியேகம்பப் பெரு மான் திருமுன்பு எய்தி நின்று தேவர்கள் நெடுங் காலம் வாழவேண்டி அமுதுண்டு மகிழ அவர் பொருட்டு ஆலகால நஞ்சினே யுட்கொண்டருளிய அருளாளனே, கடையவனகிய அடியேன் பின்விளே வதனே யெண் ணுது செய்த பெரும் பிழையைப் பொறுத்து அடியேற்கு மறைந்த கண்களேக் காட்டி யருள் புரிவாயாக’ என வேண்டிக் கொண்டு நிலமிசை வீழ்ந்து வணங்கினர். மங்கை தழுவக் குழைந்த பிரா ஞ கிய கச்சியேகம்பர், பொங்கிய பேரன் பால்போற்றிய வன்ருெண்டர்க்கு மறைந்த இடக்கண்ணேக் கொடுத் தருளி மலேமகளார் வழிபட்ட தமது திருக்கோலத்தைக் காட்டி யருளினர். இடக்கண்ணேப் பெற்றமையால் இறைவரது எழில்மேனியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர்.

ஆலந்தானுகந்தமுது செய்தானே

ஆதியை அமரர் தொழுதேத்துஞ் சீலந்தான் பெரிதும் முடையானேச்

சிந்திப்பாரவர் சிந்தையுளானே ஏலவார் குழலாளுமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற காலகாலனேக் கம்பனெம்மானேக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே,

என வரும் திருப்பதிகத்தினேப் பாடிப் போற்றி உடன் வந்த அடியார்களுடன் இறைவனேக் கும்பிட்டு அந் நகரத்திலே சில நாள் தங்கியிருந்தார். திருவாரூரை யடைந்து என்னுயிர்க்குயிராம் பெருமானே என்று காண்பேன் என்னும் ஏக்கமுண்டாக,

அந்திய நண்பகலும் அஞ்சுபதஞ் சொல்லி முந்தியெழும் பழைய வல்வினை மூடாமுன்