பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 327

கோபுரத்தைக் கைதொழுது உள்ளே புகுந்து புற்றிடங் கொண்ட பெருமான் திருமுன்னர் வீழ்ந்தெழுந்தார். இறைவரது திருமேனியைக் காணத் தமக்கு ஒருகண் போதாமையால் மனம் வருந்தினர். ‘அடியேனத் துன்பக் கடலினின்றும் கரையேற்றி மற்றைக் கண்ணுகிய வலக் கண்ணே யுந் தந்தருள் வீராக’ என வேண்டி,

மீளா வடிமை யுமக்கே யாளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாயிருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.

விற்றுக்கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பியாட்பட்டேன் குற்றமொன்றுஞ் செய்ததில்லே கொத்தையாக்கினின் எற்றுக்கடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிபட்டிர் மற்றைக்கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து

போதிரே,

என வரும் திருப்பதிகத்தினே இறைவனுடன் தமக் குள்ள தோழமைத்திறம் விளங்கப் பாடிப் போற்றினர். உள்ள த்தை யுருக்கவல்ல இத் திருப்பதிகத்தைச் செவி மடுத்த திருவாரூர்ப் பெருமான் திருவுளமிரங்கி நம்பியா ரூரர்க்கு வலக்கண்ணேயுங் கொடுத்தருளினர். இரு கண்களேயும் ஒருங்கே பெற்ற சுந்தரர் பூங்கோயி லமர்ந்த பெருமான் திருமேனியைக் கண்களாரக் கண்டு ஆடிப்பாடி த் துதித்துப் பேரின்ப வெள்ளத்தில் திளேத்து மகிழ்ந்தார். பின்னர்ப் புறம்போந்து தேவா சிரிய மண்டபத்தில் தங்கியிருந்தார்.

மீளாவடிமை யெனத் தொடங்கும் இத் திருப் பதிகத்தில் எற்றுக் கடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிபட்டீர், மற்றைக் கண் தான் தாராதொழிந் தால் வாழ்ந்து போதிரே " எனத் திருவாரூர்ப் பெரு மானே நோக்கிச் சுந்தரர் வருந்தி முறையிடுதலே