பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

பன்னிரு திருமுறை வரலாறு


நோக்குங்கால் கச்சியேகம்பர் திருவருளால் இடக்கண் பெற்ற சுந்தரர், திருவாரூர்ப் பெருமானேயடைந்து மற்றைய வலக்கண்ணேயுந் தந்தருளும்படி இத்திருப் பதிகத்தைப் பாடிப் போற்றினரென்பது நன்கு புலளும். சுந்தரர், கானுந் தன்மையிழந்த தம் முடைய இரண்டு கண்களேயும் இறைவன் மீளவும் காணுமாறு க ம க் கு க் காட்டியருளிய அற்புத் நிகழ்ச்சியை,

பேணு தொழிந்தே னுன்னேயல்லாற் பிறதேவரைக் காணு தொழிந்தேன் காட்டுதியே லின்னங் காண்பன்ை பூனை ரவா புக்கொளியூரவி நாசியே காணுத கண்கள் காட்டவல்ல கறைக்கண்டனே.

என வரும் திருப்பாடலின் ஈற்றடியில் தெளிவாகக் குறித்துப் போற்றியுள்ளமை இங்கு நினேக்கத் தகுவ தாகும்.

ஆரூர்ப்பெருமானேப் பரவையார்பால் இருமுறை தூதனுப்புதல்

சுந்தரர் பூங்கோயிலமர்ந்த பெருமானே வணங்கச் சென்றபொழுது அவருடைய பரிசனங்களிற் சிலர் பரவையார் மாளிகை வாயிலே யனுகினர். தம்மைப் பிரிந்துசென்ற சுந்தரர் திருவொற்றியூரிற் சங்கிலியாரை மணந்துகொண்ட நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற பரவை யார், சினங்கொண்டிருந்தமையால் சென்ற பரிச னங்கள் மாளிகைக்குள் நுழையப்பெருது மீண்டு தேவாசிரிய மண்டபத்தை யடைந்தனர். சுந்தரரை இறைஞ்சி நின்று பெரியீர், தாங்கள் திருவொற்றி யூரிலே சங்கிலியாரை மணந்த செய்தி முழுவதையும் பரவையார் முன்னமே கேள்வியுற்றுச் சினங்கொண் டிருந்தமையால் இப்பொழுது யாங்கள் அவர் மாளி கைப்புறத்திலும் செல்ல வொண்ணுதபடி தடுக்கப் பட்டுத் திரும்பிவிட்டோம் எனக் கூறினர்கள். அந்