பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

பன்னிரு திருமுறை வரலாறு


திருமேனியாகக் கொண்டு எளிவந்தருளிய இறை வரைக் காணப்பெற்ற சுந்தரர், விரைந்தெழுந்து சென்று அவர் தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். * எப பிரானுகிய நுமது திருவருளால் அடியேன் திருவொற்றியூரிலே சங்கிலியை மணந்த செய்தி முழு ைதயும் பரவை கேள்வியுற்றுத் தன்பால் யான் அடைந்தால் தன் உயிரையே விட்டுவிடுவதென்னுந் துணிபுகொண்டுள்ளாள். சிறியேன் உமக்கு அடியவ. னும் தேவரீர் அடியேனுக்கு நல்ல தோழனும் ஆண்ட வனும் ஆக இருப்பது உண்மையானல், அறிவிழந்து வருந்தும் சிறியேனது அயர்வு நீங்க இவ்விரவே பரவை வீட்டுக்குத் துதுசென்று அவளது ஊடலைத் தீர்த்து அருளுதல் வேண்டும்’ எனக் குறையிரந்து வேண்டினர்.

அடியார்களது அன்பினே வேண்டும் இறைவர், வன்ருெண்டரது துன்பத்தை நீக்கத் திருவுளங் கொண்டு தம் தோழராகிய அவரை நோக்கி நீ வருந்தற்க, யாம் நின்னுடைய துரதனுகி இப்பொழுதே பரவை விட்டுக்குச் செல்கின்ருேம் எனத் திருவாய் மலர்ந்தருளித் தேவர் முனிவர் முதலியோர் புடை சூழ்ந்துவரப் பரவையார் மாளிகை வாயிலே அடைந் தார். உடன் வந்த சிவகணங்கள் அனேவரும் புறத்தே நின்றனர். இறைவர் தமக்கு வழிபாடு செய்யும் மறை முனிவர் வடிவுடன் தனித்து உள்ளே சென்று * பரவையே கதவைத் திறந்திடுக எனக் கதவினைத் தட்டி அழைத்தார். பூங்கோயிலமர்ந்த பெருமானுக் குப் பூசனைபுரியும் மறைமுனிவரே இவ்வாறு அழைக் கின் ருர் ன எண்ணிய பரவையார், இப்பெரியவர் நள்ளிரவிலே இங்கு வந்தது எக்காரணம் பற்றியோ ? என நடுக்க முற்று அஞ் சிக் கதவைத் திறந்து அங்கு வந்த மறையவரை நோக்கி, செந்தண்மை பூண்ட அந்தணரே, நீவிர் எம்மையாளும் சிவபெருமானப்