பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

பன்னிரு திருமுறை வரலாறு


யெதிர்கண்டு அவர் தம்முடைய குறையினே இனிது நிறைவேற்றி வருகின் ருரெனப் பெரிதும் மகிழ்ந்த ர்; 'அன்று அடியேனேத் தடுத்தாட்கொண்டதற்கு இசை யவே இன்று பரவையின் வெகுளியைத் தணித்து வந்தீர்' என மனங்க சிந்து இறைஞ்சிப் போற்றினர். அப்பொழுது சிவபெருமான் வன்றெண்டரை நோக்கி ‘யாம் நினது வேண்டுகோளின் படியே பரவை வீட்டுக் குப்போய் அவளுக்குச் சொல்ல த்தக்க நியாயங்களே யெடுத்துரைத்தோம். எனினும் அவள் இசைய வில்லே என்ருர். அம்மொழியினே க் கேட்டுத் திடுக் குற்ற சுந்தரர், தமக்கு எளிவந்தருளிய இறைவரை வணங்கி முழுமுதற் கடவுளாகிய நுமது பணிமொழி யினே தும் அடியவளாகிய பரவை மறுக்குந் துணிவுடை யவளோ? நீவீர் எனது அடிமைத்திறத்தை விரும்பா விட்டால் அன்று வலியவந்து எளியேன ஆட் கொண்டது எதற்காக?அருளாளராகிய நீர், அடியேன் படும் துயரத்தைக் கண்டிரங்கி என்னே அவள்பாற் சேர்த்திலிராயின், என்னுயிர் விரைவில் நீங்குவது திண்னம்’ என்று சைத்துத் தளர்ந்து வீழ்ந்தார். தம் தோழராகிய சுந்தராது தளர்ச்சி கண்டு தரியாத சிவ. பெருமான், அவரை அருட் கண்ணுல் நோக்கி 'நாம் மீண்டும் பரவையாற் சென்று இப்பொழுதே நீ அவளே அடையும்படிச் செய்வோம். துயர் நீங்கி மகிழ் வாயாக’ எனத் தேறுதல்மொழி பகர்ந்து சிவகணங்க ளுடன் பரவையாரது மாளிகையை யடைந்தார்.

இங்ங்னமாக, பரவையார், தமது வெகுளியைத் தணிக்கவந்த மறைமுனிவர் நீங்கியபின் அங்ங்னம் வந்தவர் சிவபெருமானேயாதல் வேண்டுமென த் தெளிந்து பெரிதும் அஞ்சினர். "அந்தோ எம்பெரு மானது அருள் வாக்கின அறியாது மறுத்துரைத் தேனே' என மனங்கலங்கினர்; தம்முடைய தோழ ருக்காக அருச்சகர் வடிவுகொண்டு எளிவந்த பெருமானே த் தீவினையாட்டியேன் போற்ருது இகழ்ந் தேன்’ என வருந்திப் புலம்பினர்; தம்முடைய பாங்கி யரையெழுப்பி மறைமுனிவர் வந்து சென்ற நிகழ்ச்சி