பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகண்ட சோழன் 17

தமிழ் நூல்களாலும் புலகிைன்றது. ஆகவே அபய குலசேகரன் என்னும் பெயர், சோழமன்னருள் ஒருவனேக் குறித்து வழங்கிய இயற்பெயரெனக் கொள்ளுதற்கில்லே. திருமுறைகண்ட புராண ஆசிரியர் அம்மன்னனேக் குறித்துப் புகழ்ந்து போற்றிய புனே ந் துரையாகவே அப்பெயரைக் கருதவேண்டியுளது.

இராசராசன் எ ன் னு ம் பெயரை யுளத்துட் கொண்டு, திருமுறை கண்ட சோழன் தஞ்சை இராச ராசேச்சரத் திருக்கோயிலேக் கட்டிய முதலாம் இராசராச சோழனே என ஆராய்ச்சியாளர் பலரும் துணிந்து கூறுவார். முதலாம் இராசராச சோழனுக்கு அருண்மொழித்தேவன் என்ற மற்றெரு பெயரும் உண்டு. " சிந்தையருட் சிவமாகத் தெளிவித்தான் அருட்சென்னி” என வரும் திருமுறைகண்ட புராணச் செய்யுளில் இவ்வேந்தனே அருட்சென்னி என அந்நூலாசிரியர் குறித்துப் போற்றுதலால் அருள் மொழித்தேவன் என்ற பெயருடைய முதலாம் இராச ராச சோழனே திருமுறைகண்ட இராசராச மன்னன் எனக்கொள்ளுதற்கு இடமுண்டாயிற்று. திருமுறை கண்ட புராணத்திற் குறிப்பிடப்பெற்ற இராசராச அபயகுலசேகரன் என்பான் மு. த ல் இராசராச சோழனுவன் என்றும் அவ்வேந்தனே நம்பியாண்டார் நம்பியின் துணைகொண்டு திருமுறைகளைத் தேடிக் கண்டு பின்னர் அவற்றைத் தொகுப்பித்தவன் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவாராயினர். அது பற்றியே அம்மன்னனும் திருமுறைகண்ட சோழன் என்று வழங்கப்படுகின்றனன். தமிழகச் சைவ சமய வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இக்கொள்கையிற் சில ஐயங்கள் தோன்றுவதால் இதனே மீண்டும் ஆராய்வது இன்றியமையாததாகும்.

நம்பியாண்டார் நம்பி இயற்றிய பத்து நூல்கள் பதினெராந் திருமுறையிற் காணப்படுகின்றன. அவற்றுள் திருத்தொண்டர் திருவந்தாதி என்பதும்