பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

பன்னிரு திருமுறை வரலாறு


அவளிடத்திற் செல்லலாம் எனத் திருவாய் மலர்ந் தருளினர். இறைவனது அருளுரையினேக் கேட்டு மகிழ்ந்த சுந்தரர், காந்தைபிரானே, போகம் வீடு என்னும் இருமையின் பத்தினேயும் அடியேற்கு வழங்கி யருளினtர். இனி எளியேற்கு இடரொன்றுமில்லே " என்று கூறி இறைவன் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சி ஞர். தொண்டர்களின் துயர் தீர்த்தருள் புரியும் வீதி விடங்கப் பெருமான் எ வ்வுயிரும் களிகூர விடை மீதெழுந்தளித் திருவாரூர்ப் பூங்கோயிலிற் சென்று புகுந்தருளினர். புற்றிடங்கொண்ட பெருமானது திரு வருள் பெற்ற நம்பியாரூரர், தம்முடைய பரிசனங்கள் சூழ்ந்துபோற்றி உடன்வரப் பரவையார் மாளிகைக்குப் புறப்பட்டருளினர். அன்பிற் சிறந்த பரவையாரும் திரு மாளிகையை யணி செய்து நிறைகுடமும் நல் விளக்கும் நறும்புகையும் கொண்டு பாங்கியர்களுடன் மனைவாயி லிலே நின்று தம் அன்பிற்குரிய நம்பியாரூரரை வணங்கி வரவேற்ருர், சுந்தரர் பரவையாருடைய செங்கையினேப்பற்றிக்கொண்டு தி ரு ம வளி ைக யி னுள்ளே சென்று சேர்ந்தார். உயிரோரன்ன செயிர் தீர் காதலராகிய அவ்விருவரும் வீதிவிடங்கப்பெருமான் தம்பொருட்டுத் துரதராக எளிவந்தருளிய திருவருட் செயலே நினேந்துருகி மாறிலா மகிழ்ச்சியில் திளைத் திருந்தார்கள்.

அடியார்கள் எங்கேயிருந்து நினைந்தாலும் அங்கே வந்து அவர்களோடு உடனுகி நின்று அன் ைேரது துன்பத்தைப் போக்கியருளவல்ல அருளாளனுகிய சிவபெருமான், தன் அன்புடைத் தோழர் சுந்தரர் பொருட்டு எழுந்தருளி வந்து தாமரை மலரினும் மெல்லிய தன் திருவடிகள் திருவாரூர்ப் பெருவீதியின் புழுதியிலே அளேந்து வருந்த நள்ளிரவிலே ஒருமுறைக் கிருமுறை தூது சென்றருளிய இவ்வருட்செயல் நினேக் குந் தோறும் நெஞ்சத்தை புருக்குவதாகும். தனக்கு உவமையில்லாத தலைவனுகிய சிவபெருமான் தம் பொருட்டுத் து தகுக எளிவந்தருளிய இச்செய்தியை,