பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 33;

  • துரதனே என்றனே ஆள் தோழனே ?

எனவும்,

அடியேற்கெளிவந்த தூதனேத் தன்னேத் தோழமையருளித்

தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்

நாதனே ? எனவும் வரும் தொடர்களால் நம்பியாரூரர் நெஞ்சம் நெக்குருகிக் குறித்துப் போற்றியுள்ளார், அவருடைய வாய் மொழிகளாகிய இத்தொடர்களே இவ்வற்புத நிகழ்ச்சியை வற்புறுத்தும் அகச்சான்றுகளாக அமைந் திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

ஏயர்கோனுற்ற பிணி தவிர்த்தல்

நம்பியாரூரர் தம் மனேவியாகிய பரவையாரது ஊடலேத் தணிவித் தற்பொருட்டு நள்ளிரவில் இருமுறை தூதுசென்று வரும்படி சிவபெருமானே ஏவல்கொண் டார் என்ற இச்செய்தி நாடு முழுவதும் பரவியது. சோழநாட்டில் திருப்பெரு மங்கலத்திலே வேளாளர் மரயிலே தோன்றிய திருவருட் செல்வராகிய ஏயர் கோன் கலிக்காமநாயனுர் இச்செய்தியினேக் கேட்டு உளம் வெதும்பி வருந்தினர். எல்லா வுலகத்துக்கும் த லேவனுகிய இறைவனே அடியவன் ஏவல் கொள்வ தென்பது மிகவும் நன் ருயிருக்கிறது. இப்படி இறைவ னேயே ஏவல் கொள்பவன் தொண்டனும். இக்கொடுஞ் செய்தியைக் கேட்டிருந்தும் யான் உயிர் தாங்கியிருக் கின்றேன். ஒருவன் தன் மனைவியின் பிணக்கத்தைத் தீர்த்து அவளுடன் மகிழவேண்டும் என்னும் ஆசை காரணமாக இறைவனேயே தூதாக அனுப்ப, ஒப் பில்லாத கடவுள் அவனுக்குத் தூதராகி ஒருநாள் இரவு முழுவதும் தம் திருவடிகள் நோ.வ அலேந்து திரிந்தாராம். வானே ராலும் அறிய முடியாத அவ் விறைவர் அடியார்களிடத்துக் கொண்ட அருள் காரணமாகத் துரது செல்ல இசைந்தாராயினும் அடியவ ைெருவன் அவரை அங்ங்னம் ஏவுதல் என்ன முறை?