பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

பன்னிரு திருமுறை வரலாறு


குள்ள பணியாளர்கள் சுந்தரரை வணங்கி நின்று பெரியீர். அவர்க்குத் தீங்கொன்றுமில்லை. உள்ளே பள்ளிகொள்கின் ருர்’ என விண்ணப்பஞ்செய்தார்கள். சுந்தார், அவர்களே நோக்கி நீவிர் கலிக்காமர்க்குத் தீங்கெதுவுமில்லையென்றீர், ஆயினும் என் மனம் தெளிவுபெற்றிலது. ஆதல்ால் யான் அவரை விரைவிற் காணுதல் வேண்டும்’ என்ருர். அவரது விருப்பத்தை மறுத்தற்கியலாமையால் அவரை ஏயர்கோன் இருந்த அறைக்கு அழைத்துச் சென்ருர்கள். அவ்வறையி உள்ளே புகுந்த வன்ருெண்டர் குருதிநீர் சோரக் குடர் சரிந்து உயிரின்றிக்கிடந்த கலிக்காமரைது உடம் பினேக்கண்டு மனநடுக்கமுற்றர். நானும் இவர் முன் பு என்னுயிரைத் துறப்பேன்’ எனத் துணிந்து கலிக்காமர் வயிற்றிற் செருகப்பட்டிருந்த குற்றுடைவாளைப் பற்றிக் கொண்டு அவ்வாளினலேயே தம்முயிரையும் போக்க முனைந்தார். அந்நிலையில் சிவனருளால் ஏயர்கோன் கலிக்காமநாயனர் உயிர்பெற்றெழுந்து வன்ருெண்டர் கையிற்பற்றிய வாளினைப் பற்றித் தடுத்தார். அன்பர் உயிர்பெற்றெழுந்தமை கண்டு மகிழ்ந்தவன் ருெண்டர், கலிக்காமர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். ஏயர் கோன் கலிக்காமருைம் தம் கையிற் பற்றிய வாளினே நிலத்திலே யெறிந்துவிட்டு நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சினர். இருவரும் எழுந்து நின்று ஒருவ ரொருவரை அன்பினுல் தழுவிக்கொண்டு கெழுத கை நண்பராகி இறைவனது திருவருளே வியந்து போற்றி ஞர்கள். பின் நம்பியாரூரர், ஏயர்கோன் கலிக் காமன ருடன் திருப்புன்கூரை யடைந்து இறைவனது திருக் கோயிலே வலம்வந்து வணங்கி அந்தணுளனுன் னடைக் கலம் புகுத என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தினேப் பாடிப் பரவினர். தம் அன்புடைத் தோழராகிய ஏயர்கோன் கலிக்காமநாயனரைப்பற்றிய சூலேநோயாகிய கடும்பிணியைத் தீர்த்தருளிய இறைவ னது திருவருட்செயலே இத்திருப்பதிகத்தில்,