பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 339

ஏதநன்னிலம் ஈரறுவேலி ஏயர்கோன் உற்ற

இரும்பிணி தவிர்த்து ? என வருந்தொடரால் நம்பியாரூரர் கு றி ப் பி ட் டு ப் போற்றியுள்ளார்.

ஏயர்கோன் கலிக்காமநாயனுரை நண்பராகக் கொண்ட நம்பியாரூரர். அவருடன் திருவாரூரை யடைந்து பூங்கோயிலமர்ந்த பெருமானேக் கும்பிட்டு மகிழந்தார். அங்கு நம்பியாரூரருடன் அளவளாவி மகிழ்ந்த ஏயர்கோன்கலிக்காமர், ஆரூரர்பால் விடை பெற்றுத் தம்முடைய ஊருக்குச்சென் ருர், பின்பு சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று அங்கு வீற்றிருந்தருளும் இறைவனே யிறைஞ்சிநின்று தமக்கு விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வே ன் டு ம் என்ற குறிப்புடன்,

பத்துணர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்

பாவையரைக் கிறிபேசிப் படிருடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித்திரிவீர்

செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொரு

நாளிரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக்கோவை

யவையூனத் தந்தருளி மெய்க்கினிதா நாறும் கத்துாரி கமழ்சாந்தும் பணித்தருள வேண்டும் கடல் நாகைக் காரோன மேவியிருந்தீரே.

என வரும் திருப்பதிகத்தினேப் பாடினர். சுந்தர ரது வேண்டுகோளுக்கு இசைந்தருளிய சிவபெருமான், அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறுமணப் பொருள்களும் பட்டாடைகளும் க டு கி ச் செ ல் லு ம் குதிரையும் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தருளி ர்ை. விலே மதித்தற்கரிய அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர், நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு