பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

பன்னிரு திருமுறை வரலாறு


நடுவிலுள்ள தலங்களே வணங்கித் திருவாரூரை யடைந்து பூங்கோயிலமர்ந்த பெருமானேப் போற்றி மகிழ்ந்திருந்தார்.

சேரமான் தோழராய் அவருடன் தல யாத்திரை செய்தல்

இங்ங்னமாக, சேரமண்டலத்தை ஆளும் பெருமாக் கோதையாராகிய சேரமான் பெருமாள் நாய னுர், நம்பியாரூரது பெருமையினக் கூத்தப்பெருமான் அறி வுறுத்தியருளக் கேட்டுணர்ந்து வன்ருெண்டராகிய அவரைக காணவேண்டுமென்னும் பேரார்வத்துடன் தில்லைச் சிற்றம் பல்வரை வழிபட்டுத் திருவாரூரை நோக்கி வருவாராயினர். சேரவேந்தரது வரு கையை யு ைர் ந் த வ ன் .ெ ரு ண் ட ர், சிவனடி யார்களுடன் அவரை யெதிர்கொண்டழைத்தார். நம்பியாரூரரைக் காணப்பெற்ற சேரமான் பெருமாள், அவருடைய திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சினர். சுந்த ரர், தாமும் சேரவேந்தர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை இருகைகளாலும் எடுத்துத் தழுவிக் கொண்டார். இங்ங்னம் சேரமான் பெருமாளும் நாவ லூர் மன்னரும் உயிர் ஒன்றி உடம்பும் ஒன்ருமென அன்பினல் அளவளாவி மகிழும் தோழமைத் திறத்தைக் கண்ணுற்ற சிவனடியார்கள், திருநாவலூரராகிய சுந்த ாரைச் சேரமான் தோழர்' என்ற பெயரால் அழைத் துப்போற்றினர்கள்.

சேரமான் தோழராகிய சுந்தரர், கார்கொண்ட கொடைக்கழறிற்றறிவார் எனத் தம்மால் முன்பு பாராட்டப்பெற்ற சேரவேந்தரது கையினேப் பற்றி யழைத்துக்கொண்டு திருவாரூர்த் திருக்கோயிலே வலம் வந்து வணங்கி உள்ளே புகுந்தார். சேரமான் பெரு மாளும் உடைய ந ம் பி யா கி ய சுந்தரரைத் தொடர்ந்துசென்று பூங்கோயிலமர்ந்த இறைவர் திரு