பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

பன்னிரு திருமுறை வரலாறு


ருடன் செல்லத் துணிந்தார். ஒத்த உள்ளமுடையார் இருவரும் அடியார்களும் பரிசனம் புடைசூழத் 'திருமறைக்காடு அகத்தியான் பள்ளி, கோடிக்குழகர் முதலிய கலங்களைப் பணிந்து பாண்டி நாடடைந்து திருப்புத்து ரைப் பணிந்து தமிழ் நிலைபெற்ற மதுரை நகரத்தை யடைந்தார்கள்.

அப்பொழுது பாண்டி நாட்டை ஆட்சி புரிந்த வேந்தளுகிய பாண்டியனும் பாண்டியன் மகளே மணந்து வேட்டகத்தில் தங்கியிருந்த சோழ மன்னனும் இவ்விரு பெருமக்களேயும் எதிர்சென்று வரவேற்றுத் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்ற னர். நம்பியாரூரர் சேரமான் பெருமாளுடன் ஆலவா யிறைவரை வணங்கிச் செந்தமிழ்ப்பாமாலே பாடிப் போற்றினர். ‘அடியேனேயும் பொருளாக எண்ணித் திருமுகப்பாசுரம் பாடிக்கொடுத்தருளிய பேரருளின் எல்லேயை அறிந்திலேன்' எனச் சேரமான் பெருமாள் ஆலவாய் அண்ணலேப் பரவித்துதித்தார். பாண்டியன் இவ்விருபெருமக்களேயும் தன் அ ர ண் ம ன க் கு அழைத்துச் சென்று அ ன் ட ட ன் உபசரித்துப் போற்றினன். சுந்தரரும் சேரமானும் சில நாள் அங்கே தங்கியிருந்து திருவாலவாயிறைவரை வணங்கி மகிழ்ந் தார்கள்.

சுந்தரர், சேர சோழ பாண்டியர்களாய அம் மூவேந்தர்களுடன் திருப்பூவணம் சென்று திருவுடை யார்’ என்னுந் திருப்பதிகம் பாடித் துதித்தார். திருவாப்பனுர், திருவேடகம் முதலிய தலங்களே யிறைஞ்சித் திருப்பரங்குன்றத்தையடைந்து கோத் திட்டையும் கோவலும் எனவரும் திருப்பதிகத்தினே ப் பாடிப் பரவினர். இறைவ, நின் திருவடிக்கீழ் நின்று ஆட்செய்யும் அருமையை நினேந்து அஞ்சு கின் ருேம் என்னுங்கருத்தமைய அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே என இப்பதிகப் பாடல்தோறும் குறித்துப்