பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 3.43

போற்றினர். இறைவனுக்குத் தொண்டு செய்யும் அருமையை இப்பதிகவாயிலாகக் கேட்டுணர்ந்த அரசர் மூவரும் அன்பு நீங்கா அச்சமுடன் நம்பியா ரூரரை வணங்கினர்கள். முடியுடை வேந்தர்களாகிய தமிழ் மூவேந்தர் முன்னிலையிலே இத் திருப்பதிகம் திருப்பரங்குன்றத்தில் அ ரு ளி ச் செய்யப் பெற்ற தென்பது,

அடிகேளுமக் காட்செய வஞ்சுதுமென் றமர ச்பெருமானே ஆரூரனஞ்சி முடியா லுல காண்ட மூவேந்தர் முன்னே

மொழிந்தாறு மோர் நான்கு மோ ரொன்றினேயும் படியா விவைகற்று வல்ல அடியார் பரங்குன்றமேய பரமனடிக்கே குடியாகி வானுேர்க்குமோர் கோவுமாகிக்

குலவேந்தராய் விண்முழுதாள் பவரே. எனவரும் இப்பதிகத் திருக்கடைக் காப்பால் இனிது விளங்கும்.

பாண்டி நாட்டுத் தலங்களேயெல்லாம் வழிபட விரும்பிய சுந்தரர், சேர மான் பெருமாளுடன் திருப்பரங் குன்றத்தினின்றும் புறப்பட்டபொழுது, அந்நாட்டு மன் ன கிைய பாண்டிய ன் , அவ்விரு பெருமக்களும் தென்னுட்டுத் திருக்கோயில்களே வழிபடுவதற்கு வேண்டிய எல்லா வசதிகளேயும் செய்து வைக்கும்படி ஏவலாளர்களே யனுப்பினன். பாண்டியனும் சோழனு மாகிய அவ்விகுவேந்தர்களும் சுந்தரர், சேரமான் ஆகிய அவ்விருவரிடத்தும் விடைபெற்று மதுரை நகரத்தை யடைந்தார்கள். சுந்தரர், சேரமான் பெரு மாளுடன் திருக்குற்ருலம்-குறும் பலா, திருநெல்வேலி முதலிய தலங்களே வழிபட்டுத் திருவிராமேச்சரத்தை யடைந்து இராமபிரானல் வழிபடப்பெற்ற பெருமானே த் திருப்பதிகச் செந்தமிழ்மாலேகளாற் போற்றிசைத்துச் சிலநாள் அங்கே தங்கியிருந்தார். அங்கிருந்தபடி ஈழ