பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 345

வேண்டிக்கொண்டார். சுந்தரர் அதற்கு இசைத்து சேரமான் பெருமாளுடன் புற்றிடங்கொண்ட பெரு மானே யிறைஞ்சி விடைபெற்றுத் திருவாரூரினின்றும் மேற்றிசை வழியாகப் புறப்பட்டுக் காவிரியின் தென் கரை வழியே திருக்கண்டியூரை யடைந்து இறைவனே யிறைஞ்சி மகிழ்ந்தார். அப்பொழுது வடகரையி லிருக்கிற திருவையாறு எதிரே தோன்றக் கண்டு நெஞ்சங் கசிந்துருகிய சுந்தரர், கடல்போற் பெருகும் காவிரியாற்றின் வெள்ளத்தைக் கடந்து தொழநினேந், தார். சேரமான் பெருமாளும் ஆரூரரை நோக்கி இறை வர் எழுந்தருளிய திருவையாற்றினே வழிபட நினைந்து என்னுள்ள ம் உருகா நின்றது. நாம் இவ்வாற்றைக் கடந்து ஐயாற்றிறைவரைப் பணிவோம்’ எனக் கூறினர். அதுகேட்ட சுந்தரர் ஓடங்கள் செல்லாதபடி காவிரி நதியிற் க ைரகடந்து வெள்ளம் பெருகுதலேக் கண்டு கலக்க முற்று.

பரவும் பரிசொன் நறியேனுன் பண்டேயும் மைப்

டயிலா தேன்

இரவும் பகலும் நினேந்தாலும் எய்ததினேய

மாட்டேனுன்

கரவி லருவி கமுகுண்னத் தெங்கங் குலேக்கீழ்க்

கருப்பாலே

அரவத்திரைக் காவிரிக்கோட்டத் தையாறுடைய

வடிகளோ.

என வரும் திருப்பதிகத் தினேப்பாடி ஐயாறுடைய அடி களோ என ஐயாற்றிறைவரை ஆராத காதலால் அழைத்து நின் ருர், அப்பொழுது சிவபெருமான், கன்று அழைத்தலேக்கேட்டுக் கதறிக் கணக்கின்ற பசு வைப்போன்று எல்லோரும் கேட்க ஒலம் என்று உரக்கக் கூறியருளினர். உடனே காவிரி நதியின் வெள்ளம் விலகி நடுவே வழிகாட்டியது. மேற்பக்கத்து வெள்ளம் பளிங்கு மலேயென விலகி நிற்கக் கீழ்ப் பக்கத்து நீர் வடிந்தோட மணற்பரப்பாயிருந்த நடு