பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

பன்னிரு திருமுறை வரலாறு


வழியைக் கண்டு இறைவனருளே வியந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாளும் அடியார் திருக் கூட்டத்துடன் அவ்வழியே இறங்கிச்சென்று கரையேறி ஐயாறு அமர்ந்தபெருமானே அன்பினல் இறைஞ் சிப் போற்றிக் காவிரி நதியின் நடுவிலமைந்த அம் மணல் வழியாகவே மீண்டும் வந்து தென்கரையில் ஏறி ஞர்கள். அந்நிலையில் முன் விலகி நின்ற வெள்ளம் தொடர்ந்து செல்வதாயிற்று. இங்ங்னம் காவிரிநதியின் வெள்ளத்தால் உண்டாகிய தடையை விலக்கு தற். பொருட்டு நம்பியாரூரர் இத்திருப்பதிகத்தினேப் பாடி பருளினரென்பது, இப்பதிகத்து,

கதிர்க்கொள் பசியை யொத்தே நான் கண்டே

னும் மைக் காணுதேன் எதிர்த்து நீந்த மாட்டேன னெம்மான் றம்மான்

றம்மானே விதிர்த்து மேக மழைபொழிய வெள்ளம் பரந்து

துறை சிதறி

அதிர்க்குந் திரைக்காவிரிக்கோட்டத் தையா

றுடைய வடிகளோ,

என வரும் திருப்பாடலால் இனிது விளங்கும்,

ஆறு விலக ஐயாற்றிறைவதைக் கண்டு கும் பிட்டு மகிழ்ந்த அவ்விருபெருமக்களும் வழியிலுள்ள பல தலங் கனேயும் வணங்கிக் கொங்குநாட்டைக் கடந்து சேர ந | ட ை- ந் து மலே நாட்டு மக்கள் மகிழ்ந்தெதிர் கொள்ளக் கொடுங்கோளுரையடைந்தனர். சேரமான் பெருமாள், தம் தோழராகிய வன்ருெண்டரைத் திருவஞ் சைக்களம் என்ற திருக்கோயிலுக்கு அழைத்துச் சென் ருர், அஞ்சைக்களத் திறைவரைக் கும்பிட்டு மகிழ்ந்த சுந்தரர், முடிப்பதுகங்கை என்னும் திருப் பதிகத்தினேப் பாடித் துதித்துப் புறம் போந்தார். சேர மான்பெருமாள் தம் கெழுதகை நண்பராகிய சுந்தர ரைப் பட்டத்து யானேயின்மேல் அமரச்செய்து தாம் அவர் பின்னே யமர்ந்து இருகைகளாலும் வெண்சாமரை