பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 பன்னிரு திருமுறை வரலாறு

நேர்ந்த துன்பத்தை யெண்ணித் திருமுருகன் பூண்டி யிற் கோயில்கொண்டருளிய சிவபெருமானே ச் செந்த மிழ்ப்பதிகத்தாற் போற்றி வணங்கினராக, வழிப் போவார்க்குத் தீங்குசெய்து வாழும் அவ்வேடர்களும் தம் கொடுந்தொழிலே நீங்கிச் சுந்தரமூர்த்தி சுவாமிக ளுடைய திருவடிகளைப்பணிந்து அடங்கி யொழுகினர் களென் பதும்,

எங்கேனும் போகினும் எம்பெருமானே நினேந்தக்கால் கொங்கே புகினும் கூறைகொண் டா றலேப்பாரிலே " என வரும் சுந்தரர் அநுபவ மொழியாலும்,

வேடர் சுற்றம், படுத்தான் திருமுருகன்பூண்டியினிற் பராபரத்தேன் மடுத்தான் ' என அவரைக் குறித்து நம்பியாண்டார் நம்பி கூறும் இவ்வரலாற்றுக் குறிப்பாலும் இனிது விளங்கும்.

முதலையுண்ட பாலனே மீட்டுத் தந்தருளுதல் திருவாரூரிற் புற்றிடங்கொண்ட பெருமானேப் போற்றி மகிழ்ந்திருந்த நம்பியாரூரர், சிலநாட் சென்ற பின் தம்கெழு தகை நண்பராகிய சேரமான் பெருமாளே நினேந்து மலே நாடு செல்லத் திருவுளங்கொண்டார். சோழநாட்டைக் கடந்து கொங்குநாடடைந்து திருப் புக்கொளியூர் அவிநாசியென்னுந் தலத்தை யணுகி வீதிவழியாகச் சென்ருர். அப்பொழுது அங்கே ஒரு வீட்டில் மங்கலவொலியும் அதற்கு எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதகலக்கேட்டு அங்குள்ளாரை நோக்கி மாறுபட்ட இவ்விரண்டொலியும் ஒருங்கு நிகழக் காரணம் யாது ' என வினவினர். அது கேட்ட

1. இங்ங்னம் ஆறலேப்போர் பல்கிவாழும் கொங்குநாட் டிற் புதியராய்ச் சென்ருேர் பாதுகாப்பற்ற நிலேயிற் பெரிதும் வருத்தமுற்ற அக்கால நிகழ்ச்சியினை யொட்டியே ஏமரார் கொங்கேறிஞர் (282) என்னும் பழமொழியுண்டாயிற்றுப் போலும்.