பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

பன்னிரு திருமுறை வரலாறு


வேண்டும்’ என அருளிச்செய்து புதல்வனே மு ன் விழுங்கிய மடு எங்கேயுளது என வினவிச்சென்று அம் மடுவின் கரையை யடைந்தார். முதலே யானது தான் விழுங்கிய புதல்வனே உயிருடன் கரையிற் கொண்டு வந்து தரும்படி அருள் செய்வீராக எனத் திருப் புக்கொளியூர் அவிநாசியில் எழுந்தருளிய சிவபெரு மானே நினேந்து,

எற்ருன் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானேயே உற்றுயென் றுன்னேயே யுள்குகின் றேனுணர்ந் துள்ளத்தால் புற்ரு டாவா புக்கொளி பூசவி நாசியே பற்ருக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே.

என்ற திருப்பதிகத்தினேப் பாடத் தொடங்கினர். இப் பதிகத்தில்,

உரைப்பா ருரையுகந் துள் கவல்லார் தங்க ளுச்சியாய் அரைக்காடரவ ஆதியும் அந்தமும் ஆயினுய் புரைக்காடு சோலேப் புக்கொளி யூரவிநாசியே கரைக்கான் முதலேயைப் பிள்ளே தரச் சொல்லு காலனேயே.

எனவரும் நான்காந் திருப்பாடலேப் பாடும்பொழுது காலனுகிய இயமன், மடுவிலிருந்த முதலே வயிற்றிலே முன் விழுங்கப்பட்டிறந்த புதல்வனது உடம்பைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சியை யுடையதாகச் செய்து அவ்வுடம்பினுள்ளே அப்புதல்வனது உயிரைக் கொண்டுவந்து புகுத்தின்ை. உடனே முதலேயானது படுவிலிருந்து வெளிப்பட்டு முன் தான் விழுங்கிய புதல்வனேக் கரையிலே கொண்டுவந்து உமிழ்ந்தது. புதல்வனேக்கண்ட தாயார், விரைந்து சென்று தழுவி எடுத்துக்கொண்டார். தாயும் தந்தையுமாகிய அவ்: விருவரும் சுந்தரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ர்ைகள். இத்தகைய அற்புத நிகழ்ச்சியை நேரிற் கண்ட அனே வரும் இறைவனது திருவருட்டிறத்தை வியந்து போற்றினர்கள். முதலே வாயினின்றும்