பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகண்ட சோழன் #9

சிவநெறிச் செல்வராகிய நம்பியாண்டார் நம்பியும் தம்மை அன்புடன் ஆதரித்துவந்த ஆதித்தன் என்ற சோழமன்னன் ஒருவனேத் தாம் பாடிய திருத்தொண் டர் திருவந்தாதியில் மூன்று பாடல்களிற் பாராட்டியுள் ளார். அப்பாடல்கள்,

  • புலமன்னிய மன்னேச் சிங்கள நாடு பொடிபடுத்த

குலமன்னிய புகழ்க்கோகன நாதன் குலமுதலோன் நலமன்னிய புகழ்ச்சோழன தென்பர் நகுசுடர்வாள் வலமன்னிய எறிபத்தனுக் கீந்ததோர் வண்புகழே (50)

  • சிங்கத்துருவனேச் செற்றவன் சிற்றம்பல முகடு

கொங்கிற்கணக மணிந்த ஆதித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வ மெனப்பறை போக் கெங்கட் கிறைவன் இருக்குவேளுர்மன் இடங்கழியே’(65)

செம்பொன் அணிந்து சிற்றம்பலத்தைச்சிவ

லோகமெய்தி நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர் நல்ல வம்புமலர்த்தில்லே யீசனேச்சூழ மறைவளர்த்தான் நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்களுனெனும்

நித்தனேயே’

என்பனவாம். இவற்றில் அச்சோழன் கொங்கு நாட்டி லிருந்து பொன்கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தவன் என்றும், புகழ்ச்சோழர் இடங் கழியார், கோச்செங்கட் சோழர் ஆகிய அடியார்களேத் தன் முன்னேர்களாகக் கொண்டவன் என்றும் இவ்வா சிரியர் கூறியிருப்பது உணரற்பாலதாகும். ஆகவே இப்புலவர் பெருமான் அவ்வரசன் காலத்தில் இருந் திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி, அவ் வேந்தன் யாவன்? என்பது ஆராயற்பாலதாம்.

சோழ மன்னருள் ஆதித்தன் என்னும் பெயரு டையார் இருவர் ஆவர். அவர்களுள் முதல்வன், பர கேசரி விசயாலயசோழன் புதல்வனுகிய முதல்