பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

பன்னிரு திருமுறை வரலாறு


சேரமான்பெருமாளுடன் அளவளாவி மகிழ்தல்

முதலே யுமிழ்ந்த பாலகனுக்கு முந்நூல் சாத்தி மகிழ்ந்த நம்பியாரூரர், தம் அன்புடைத் தோழர் சேரமான் பெருமாளேக் கண்டு அளவளாவி மகிழ வேண்டுமென்னும் பேரார்வத்துடன் மலே நாட்டை நோக்கிச் செல்வாராயினர். நம்பியாரூரர் வஞ்சி நகரத்தை நோக்கி வருதலைக் கேள்வியுற்ற சேரமான் பெருமாள், தம் ஆருயிர்த் தோழராகிய அவரை எதிர் கொண்டு வணங்கி யானைமேலமர்த்தித் தம் நகரத் துக்கு அழைத்துவந்து அரியனேயில் அமரச்செய்து பூசித்துப் போற்றினர். சேர மன்னரால் உபசரிக்கப் பெற்ற சுந்தரர் அவருடன் அருகேயுள்ள மலேநாட்டுத் தலங்களே இறைஞ்சி அன்பினல் அளவளாவி மகிழ்ந் திருந்தார்.

திருக்கயிலைக்கு எழுந்தருளுதல்

ஒருநாள் சேரமான்பெருமாள் திருமஞ்சன சாலே யில் நீராடிக்கொண்டிருந்தபொழுது நம்பியாரூரர் திருவஞ்சைக் களத்திறைவனை வழிபடச்சென்ருர், திருக்கோயிலிற் புகுந்த சுந்தார், நெஞ்சம் நெகிழ்ந் துருகிக் கண்ணிர்சோர நிலமிசை வீழ்ந்திறைஞ்சி இறைவனே வேண்டுங் குறிப்புட ன் அஞ்சைக் களத் தில் எழுந்தருளியுள்ள பெருமானே, அடியேன் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து நீங்கினேன். அடியேனே நின்திருவடியிலே சேர்த்தருளல்வேண்டும்? எனத் தலைக்குத்தலேமாலே என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். இப்பதிகத்தில் வெறுத்தேன் மனே வாழ்க்கையை விட்டொழிந்தேன்’ எனத் தமது மனக் கருத்தை வெளிப்பட எடுத்துரைத் தார். அடியார்களின் கருத்தறிந்து முடிக்க வல்ல கயிலைப்பெருமான், சுந்தரரது பாசத்தளேயை யகற்றி ஈறிலாப் பேரின்ப வாழ்வைத் தந்தருளத் திருவுளங் கொண்டார். நம்பியாரூரரைத் திருக்கயிலாயத்திற்கு அழைத்து வரும்படி வெள்ளேயானேயுடன் தேவர் களைத் திருவஞ்சைக் களத்திற்கு அனுப்பியருளினர்.