பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

பன்னிரு திருமுறை வரலாறு


ஆதித்த சோழன் என்பான். மற்றையோன், சுந்தர சோழன் மூத்தமகனும் முதல் இராசராச சோழன் தமையனுமாகிய இரண்டாம் ஆதித்த சோழனவன். இவனே ஆதித்த கரிகாலன் என்றும் அந்நாளில் வழங் கியுள்ளனர். இவன், தன் தந்தையின் ஆட்சியில் இள வரசகை இருந்த நாட்களிற் சில அரசாங்க அலுவலா ளர்களாற் கொல்லப்பட்டுப் போனன் என்பது, தென்னுர்க்காடு சில்லா சிதம்பரம் தாலுக்காவிலுள்ள உடையார் குடியிற் காணப்படும் ஒரு கல் வெட்டால் அறியப்படுகின்றது. எனவே இளவரசனுகிய இவன் இளமைப் பருவத்திற் கொலேயுண்டிறந்தமை தெளி வாம். ஆகவே, இவன் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து சிவலோக மெய்தின்ை என்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை. இந் நிலேயில் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்த வகை நம்பியாண்டார் நம்பி குறிப் பிட்ட ஆதித்தன் என்பான் விசயாலய சோழன் புதல்வனும் முதற் பராந்தக சோழன் தந்தையும் கி. பி. 870 முதல் 907 வரையில் சோழமண்டலத்தை ஆட்சி புரிந்த பெருவேந்தனுமாகிய முதல் ஆதித்த சோழனேயாவன். இவன் பல்லவ அரசனகிய அபரா சிதவர்மனேப் போரில் வென்று தொண்டைமண்டலத் தைக் கைப்பற்றிய காரணம் பற்றித் தொண்டை நாடு பரவின சோழன் பல்யானேக் கோக்கண்டனயின ராச கேசரி வர்மன்' என்று வழங்கப்பெற்றுள்ளான். இவன் ஆட்சியிலேதான் சோழநாடு உயர்நிலையை எய்தியது. இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் தலைக்காடு என்ற நகரையும் பிடித்துக்கொண்டான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் வரலாற்று நூல் கூறுகின்றது. ஆகவே, கொங்கு நாட்டைக் கைப்

1, Epigraphia Indica Vol. XXI. No. 27

1. South Indian Inscription VoL. III, No. 89. 2. செந்தமிழ் - தொகுதி 16, பக்கம் 394.