பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் { {

வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்திலமண் பள்ளியொடு பாழிகளும் கூடஇடித்துக் கொணர்ந்து குணபரஈச்சர மெடுத்தான் ’

என வரும் சேக்கிழார் வாய்மொழிகளால் இச்செய்தி இனிது புலனுதல் காணலாம்.

குண பரன் என்பது பல்லவ மன்னர்களுள் முதல் மகேந்திரவர் மனேக் குறித்த சிறப்புப் பெயராதல் திருச்சிராப்பள்ளியிலும் தொண் ைட நாட்டைச் சார்ந்த வல்லத்திலும் பொறிக்கப்பெற்றுள்ள மகேந்திர வர்மன் காலத்துக் கல்வெட்டுக்களால் இ னி து விளங்கும். திருச்சிராப்பள்ளிக் கோயிலிற் பொறிக்கப் பட்டுள்ள வடமொழிக் கல்வெட்டு 'லிங்கத்தைவழிபடும் குணபரன் என்னும் பெயர் கொண்ட அரசன் இந்த லிங்கத்தில்ை புறச்சமயத்திலிருந்து திரும்பிய அவனது ஞானம் நெடுங்காலம் நிலை நிற்பதாகுக” எனக் கூறுத லின், குணபரன் என்னும் பெயருடைய மகேந்திர வர்மன் முன்பு சமண சமயமாகிய புறச்சமயத்தை மேற்கொண்டொழுகிப் பின்பு இறைவன் திருவருளால் சைவகிைத் திருச்சிராப்பள்ளி மலேக்கோயிலைக் கட்டி ன்ை என்பது நன்கு புலகுைம்." மேற்காட்டிய குறிப்புக்களால் குணபரன் என்ற தன் பெயரால் திருவதிகையிற் சிவன் கோயிலைக் கட்டிய பல்லவ வேந்தன் முதல் மகேந்திரவர்மனே யென்பது உறுதி யாகத் தெரிகின்றது.

திருநாவுக்கரசர் இறைவன் திருவருளால் சமண சமயத்தொடர் பொழியச் சைவ சமயத்தை மேற் கொண்ட காலத்து அவர் முதுமைப் பருவத்தினராக

2. பெரியபுராணம், திருநாவுக்கரசர், செய்யுள் #46. 3. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி {I,

எண் 72, 4. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 1,

எண் 33, 34,