பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

பன்னிரு திருமுறை வரலாறு


தொண்டன் சீராளன் சிறுத்தொண்டன்’ எனவும் சிறுத்தொண்ட நாயனுரைத் திருஞானசம்பந்தப் பிள்ளேயார் சிறப்பித்துப் போற்றியுள்ளார். சிறுத் தொண்டன் என்பது இவ்வடியாரது இயற்பெயரன்று ; பரஞ்சோதியார் என்பதே இவரது இயற்பெயராகும். இவர் சிவனடியார்கள் பால் மிகவும் சிறுமை யுடைய ராகப் பணிந்தொழுகிய் கார ண த் த ல் சிறுத் தொண்டர் என அழைக்கப்பெற்றர். இச்செய்தி,

சீதமதி யரவினுடன் செஞ்சடைமேற் செறிவித்த நாதனடியார் தம்மை நயப்பாட்டு வழிபாட்டால் மேதகையா ரவர் முன்பு மிகச்சிறிய ராயடைந்தார் ஆதலினுற் சிறுத் தொண்ட ரென நிகழ்ந்தார் அவனியின்மேல்.’

எனவரும் பெரிய புராணச் செய்யுளாற் புலனுதல் காணலாம். சம்பந்தர் திருச்செங்காட்டங்குடியிற் சென்று சிறுத்தொண்டரால் உபசரிக்கப்பெற்ற காலத் தில் அவருடைய அருமைப் புதல்வர் சீராளதேவர் க்கு மூன்ரும் ஆண்டு நிரம்பி அக்குழந்தையைப் பள்ளி பயில வைத்தார்கள் என்பர் சேக்கிழார் . பரஞ்சோதி யார் செங்காட்டங்குடியில் தங்கி மனேயறம் நிகழ்த்தி அடியார்களேப் போற்றிச் சிறுத் தொண்டராகத் திகழ் வதற்கு முன்னே அவர், போர்த்துறையில் வல்லவராய் அரசனல் நன்கு மதிக்கப்பெற்றுப் பகைவென்று திறை கொண்டு சேனைத் தலைவராய்த் திகழ்ந்தாரென்பது பெரிய புராணத்தால் நன்கறியப்படும். படைத் தலேவராகிய பரஞ்சோதியார் தம் வேந்தன் பொருட்டுப் போர் மேற்கொண்டு சென்று வடநாட்டில் வாதாபி யென்னும் பழைய நகரத்தை அழித்து ஆங்குள்ள பல வகைப் பொருள்களேயும் தம் அரசன் முன் கொணர்ந் தார் எனப் பெரிய புராணம் கூறும்,

1. சிறுத்தொண்டர் புராணம் செய்யுள், 15. 2义 罗罗 22, 23.