பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 37 1

வாதாபி என்பது மேலச்சளுக்கிய நாட்டின் தல் நகராகும். இதனே யிடமாகக் கொண்டு ஆட்சி புரிக்க சாளுக்கிய வேந்த கிைய இரண்டாம்புலிகேசியென்பான் முதல் மகேந்திரவர்மன் ஆட்சியில் முதன்முறை யாகத் தொண்டை நாட்டின் மேற் படையெடுத்து வந் தான். அவன் வந்த காலத்துப் பல்லவ மன்னன் காஞ்சி யிலுள்ள கோட்டையில் ஒளிந்துகொண்டானென்று ஐகோல் கல்வெட்டுக் கூறுகின்றது. மகேந்திரன் தன் பகைவர்களைப் புள்ளலூரில் வென்ருன் என்று நந்திவர்ம பல்லவன் அளித்த காசாக்குடிச் செப்பேடு கூறுகின்றது. யுவான் சுவாங் என்னும் சீன தேச யாத்திரிகன் கி. பி. 641- ம் ஆண்டில் வாதாவி நகர்க்குச் சென்று அங்குச் சிலநாள் தங்கியிருந்தபொழுது தான் கண்ட அந் நகரத்தின் சிறப்பியல்பினத் தனது பாத்திரைக் குறிப் பில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளான். அக்குறிப்பின்க் கூர்ந்து நோக்குங்கால் கி. பி. 641-ம் ஆண்டிலோ அதற்கு முன்னே வாதாபி நகரம் அழிந்திருத்தலியல்ா தென்பது திண்ணம். முதல் மகேந்திர வர்மனுடைய புதல்வகிைய நரசிங்கப் போத்தரையன் என்பான் தன் நாட்டின் மேல் இரண்டாம் முறையாகப் படை யெடுத்துவந்த சளுக்க வேந்தனுகிய புலிகேசியைப் பரியளம், சூரமா ரம், மணிமங்கலம் முதலிய ஊர்களிற் பொருது வென் ருன். அவ்வளவில் நில்லாது சளுக்க வேந்தனே த் துரத்திச் சென்று அவனது வாதாவி நகரத்தைக் கைப்பற்றி யழித்தான். அவ்வூரில் வெற்றித்துாண் ஒன்றை நாட்டி அதன்மேல் தன் வீரச் செயலேக் கூறும் கல்வெட்டினையும் பொறித்தான். ' பல்லவன் வாதாவி நகரத்தில் நாட்டிய அவ்வெற்றித் தூணில் மகாமல்ல கூதிதிபுஜாம் அக்ரேஸர : பல்லவ ஸ்தம்பம் ஜய' என்ற தொடர்கள் இக்காலத் திலும் அழியாது காணப்படுகின்றன. மகாமல்லன்

1. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி XI, எண் 1.