பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

பன்னிரு திருமுறை வரலாறு


என்ற சிறப்புப் பெயருடையவனும் அரசர்களில் முதல்வனுமாகிய நரசிங்கவர்ம பல்லவல்ை நாட்டப் பட்டது அவ்வெற்றித்துரண் என்பது அதன் கட் காணப் படும் மேற்காட்டிய தொடர்களால் இனிது புலம்ை.

நரசிங்கவர்ம பல்லவனுடைய படைகள் மேலேச் சளுக்கிய நாட்டின்மேற் சென்று வாதாவி நகரத்தை யழித்த செயல் கி. பி. 642-ல் நடந்திருத்தல் வேண்டு மென்பர் வரலாற்ருராய்ச்சியாளர். நரசிங்கவர் மன் ஆட்சியில் நடந்த இவ்வாதாவிப் போர் இவன் பேரன் பரமேசுரவர்மனுல் அளிக்கப்பட்ட கூரம் சாசனத்திற் குறிக்கப்பட்டுளது. இப்பெரும் போரில் நரசிங்கவர்ம னுக்குச் சேனைத்தலைவராயிருந்து வியக்கத்தக்க பெரு வெற்றியைத் தந்தவர் பரஞ்சோதியாரென்னும் இயற் பெயருடைய சிறுத்தொண்ட நாயனராவர். வாதா விப் போரில் இவர் தேடித்தந்த வெற்றியினே,

மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாகத் துளே நெடுங்கை

வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும்

பரித்தொகையும் இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன்

முன் கொணர்ந்தார். எனவரும் செய்யுளால் சேக்கிழார் பெருமான் விரித்துக் கூறியுள்ளார்.

இவ்வாறு நரசிங்கவர் மனது படைத்தலைவரா யிருந்து வடபுலத்திற்சென்று செய்த பெரும்போரில் வாதாவி நகரத்தையழித்த பரஞ்சோதியாரே பின்னர் அவ்வேந்தனது விருப்பத்திற்கிசைந்து தமது பிறந்தக மாகிய திருச்செங்காட்டங்குடியை யடைந்து மனே த் தக்க மாண்புடைய மனைவியாராகிய வெண்காட்டு நங்கையாருடன் மனேயறம் நிகழ்த்திச் சிவனடியார் களுக்குத் திருவமுதளித்துச் சிறுத்தொண்டர் என்னும்