பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 375

பின்னர் இவனது மனேவியார் மங்கையர்க்கரசியார் மந்திரியார் குலச்சிறையார் ஆகிய இப்பெருமக்களது நன்முயற்சியால் திருஞானசம்பந்தப் பிள்ளையாரை வணங்கி அவர் திருக்கரத்தால் திருநீறு அணியப் பெற்று வெப்பு நோயும் கூனும் தவிர்ந்து நின்றசீர் நெடுமாறன் என அழைக்கப்பெற்றன் எ ன் பது வரலாறு. நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நி ன் ற சீ ர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என இவ்வேந்தர் பெருமானே ச் சிவனடி யாருள் ஒருவராக வைத்துப் போற்றுவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள். இத்தென்னவர் பெருமானுக்கு வாழ்க்கைத் துணேயாகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாராகிய பெரு நம்பி குலச்சிறையாரும் திருஞானசம்பந்தப் பிள்ளே யாரை மதுரைக்கு அழைத்துப் போற்றித் தெய்வத் தமிழாற் சிவநெறி வளர்த்த பெருந் திருவின ரென்பது ஞானசம்பந்தர் வரலாற்றல் நன்கு விளங்கும்.

தின்றசீர் நெடுமாறனுக்கு மககுகிய கோச் சடையன் ரண தீரன் என்பான் கி. பி. 670 முதல் 710 வரை பாண்டி நாட்டையாண்டான். அவன் கி. பி. 674-ல் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டின் மேற் படை யெடுத்து வந்த முதலாம் விக்கிரமாதித்தனே மருது ரி லும் மங்கலபுரத்திலும் எதிர்த்துப் பொருது தோல்வி யுற்ருேடச் செய்தமையும், இரண்டாம் புலிகேசியின் மகனுகிய சளுக்க விக்கிரமாதித்தனைப் பொருது துரத்தும் இப் போர் நிகழ்ச்சியிற் பல்லவ வேந்தனுகிய முதலாம் பரமேசுரவர்மனும் அவன் மகன் இரண்டாம் நரசிம்ம வர்மனும் கலந்து கொண்ட செய்தியும் வேள்விக்குடி, கூரம், கேந்துார் என்னுமிடங்களிற் கிடைத்த பாண்டிய பல்ல்வ சளுக்கர்களின் செப்பேடுகளைக் கொண்டு வரலாற்ருசிரியர்களால் நன்கா ராய்ந்து முடிவு செய்யப் பட்டுள்ளன.