பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

பன்னிரு திருமுறை வரலாறு


இனி, கோச்சடையன் ரண தீரன் என்பான், நின்ற சீர் நெடுமாறனுக்குப்பின் ஆட்சியுரிமை பெற்றதுபோல முதலாம் பரமேசுரவர்மனும் தன் பாட்டனுகிய வாதாவி கொண்ட நரசிம்மவர்மனுக்குப்பின் இரண்டாண்டு களில் ஆட்சியுரிமை பெற்றுள்ளான். எனவே கோச் சடையன் ரண தீரனுக்குத் தந்தையாகிய நின்றசீர் நெடுமாறனும் பரமேசுரவர்மன் ஆட்சிக்கு மூன் ருண்டு களுக்கு முன் மறைந்த வாதா விகொண்ட நரசிங்க வர்மனும் சமகாலத்தவரென்பதும், நின்றசீர் நெடுமாற னது வெப்புநோய் நீக்கிய சம்பந்தரும், வாதாவி கொண்ட நரசிம்ம பல்லவனுடைய படைத் தலைவ ராகிய சிறுத்தொண்டரும் கி. பி. ஏழாம் நூற்ருண்டின் இடைப்பகுதியில் இத்தமிழகத்தே வாழ்ந்த திருவருட் செல்வர்களென்பதும் நன்கு தெளியப்படும்.

இம்முடிபினே முதன் முதல் ஆராய்ந்து வெளிப் படுத்திய பெருமை மனேன் மணிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளேயவர்களுக்கே யுரியதாகும். அவர்கள் தமது நுண்ணுணர்வினுல் ஆராய்ந்து வெளியிட்ட இக் கொள்கை அவர்கட்குப் பின் கிடைத்த சாசனங்க ளாகிய வரலாற்றுச் சான்றுகளாலும் உறுதிபெற நிலத்துவிட்டது. சம்பந்தர் காலத்தைப் பற்றிய பிள்ளேயவர்களது ஆராய்ச்சி முடிபு ஏனேய சைவத் திருமுறையாசிரியர்களின் காலத்தைக் கண்டறிதற்கும் சிறந்த எல்லேக் கல்லாகத் திகழ்கின்றதென்பதனே வரலாற்ரு சிரியர்கள் நன்குணர்வார்கள்.

2. சுந்தரர்

நம்பியாரூரர் சிவனடியார்கள் அறுபத்து மூவருள் இறுதியில் வாழ்ந்தவரென்பது அவ்வடியார்களேப் போற்றிப் பரவிய திருத்தொண்டத் தொகைத் திருப் பதிகத்தால் நன்கு விளங்கும். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இறைவனது திருவடி நீழலடைந்து