பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 377

இன்புற்ற சில நாட்களுக்குப் பின் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமிழகத்திலே திருவவதாரஞ் செய்து திரு வெண்ணெய் நல்லூர்ப் பெருமானுல் தடுத்தாட் கொள் ளப்பெற்றுப் பித்தா” என்பது முதல் ஊழிதோறுரழி' யென்ப தீருகவுள்ள திருப்பாடல்களைப் பாடித் திருக் கயிலையை அடைந்தாரென்பது வரலாறு.

  • பின்பு சில நாளின்கண் ஆரூர் நம்பி

பிறங்கு திருவெண்ணெய் நல்லூர்ப் பித்தா

வென்னும் இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்’

ஈருய் முப்பத்தொண்ணுயிரமதாக முன்பு புகன்றவர் நொடித்தான் மலேயிற் சேர்ந்தார் ’’

என வரும் திருமுறைகண்ட் புராணச் செய்யுளால் இவ் வண்மை புலளுதல் காணலாம்.

திருஞானசம்பந்தபிள்ளேயார் திருநல்லூர்ப் பெரு மனத்தில் அடியார் குழுவுடன் ஈறில் பெருஞ் சோதி யினிற் புகுந்து சில மாதங்கள் கழித்தே திருநாவுக் கரசர் திருப்புகலூரில் ந ண் ண ரி ய சிவானந்த ஞான வடிவாகி அண்ணலார் சேவடிக்கீழ் அமர்ந்து இன் புற்ருர். இச்செய்தி பெரிய புராணத்திற் கூறப் படும் இவ்விரு பெருமக்கள் வரலாறுகளையும் ஒப்பு நோக்கி ஆராய்வார்க்கு நன்கு புலளும். திருநாவுக் கரசர் திருவவதாரஞ் செய்தருளியதாகக் கருதப்படும் கி. பி. 575-ம் ஆண்டுடன் அவர் இந் நிலவுலகில் வாழ்ந்த காலமாகிய எண்பத்தோராண்டுகளேயும் சேர்த்துக் கணக்கிட அவர் திருப்புகலுரரில் இறைவன் திருவடியிற் கலந்து மறைந்த காலம் கி. பி. 656-ம் ஆண்டினேயொட்டியதென்பது ஒருவாறு புலனும், இக்காலப் பகுதியையடுத்து ஒருசில ஆண்டுகளுக்குப் பின் தோன்றியவர் சுந்தரர் என முன்னேர் கூறுதலால் அப்பெருந்தகையார் வாழ்ந்த காலம் கி. பி. ஏழாம்