பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் #79

நரசிங்கன் என்ற இயற் பெயரையுடைய தோன்றல் என்பது நன்கு துணியப்படும்.

தேவார ஆசிரியர்கள் காலத்தையொட்டி ஆட்சி புரிந்த பல்லவ வேந்தர்களுள் சிங்கன் என்ற பெயரால் அழைக்கப்பட்டவர் இருவர். அவருள் முதலாமவன் வாதாவிகொண்ட நரசிங்கவர்மன். இரண்டாமவன் இராஜசிங்கன் என வழங்கும் இரண்டாம் நரசிங்கவர்ம குவான். இவ்விருவருள் முதல் நரசிங்கவர்மன் திரு ஞானசம்பந்தப்பிள்ளேயார் காலத்தவன் என்பதும் சிறுத்தொண்டராகிய பரஞ்சோதியார் இவ்வேந்தனது படைத்தலைவராய்ச் சென்று வாதவி நகரத்தை வென் றனரென்பதும் முன்னே விளங்கப்பெற்றன. திரு ஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் இறைவன் திருவடி யடைந்த சில ஆண்டுகள் கழித்துத் தோன்றிய சுந்தர மூர்த்தி சுவாமிகளால் தம்காலத்து வேந்தளுகப் போற்றப்பெற்ற கழற்சிங்கன் என்பான் முதலாம் நரசிம்மவர்மனுக இருத்தல் இயலாது. எனவே இராச சிங்கன் என அழைக்கப்பெறும் இரண்டாம் நரசிம்ம வர் மனே காடவர்கோன் கழற்சிங்கன் எனச் சுந்தர் மூர்த்திகளாற் போற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என் பது உய்த்துணரப்படும். இரண்டாம் நரசிங்க வர் ம கிைய இவ்வேந்தன் காஞ்சியில் இராசசிம்ம பல்லவேச் சுரம் என்ற பெயராற் கயிலாசநாதர் கோயிலைக் கட்டி யவன் மாமல்லபுரத்தில் இவ்வேந்தன் இராசசிம்ம பல்லவேச்சுரம், கூடித்திரியசிம்ம பல்லவேச்சுரம் என் னும் இரண்டு திருக்கோயில்களேக் கட்டியிருத்தலால் இவனுக்கு கடித்திரியசிம்மன் என்ற பெயரும் வழங்கிய தெனத் தெரிகிறது. எனவே இவன் நரசிம்மன், இராச சிம்மன், கஷத்திரிய சிம்மன் என்ற மூன்று பெயர்களே யுடை யயிைருந்தமை பெறப்படுகின்றது. இம்மூன்று பெயர்களிலும் சிம்மன் அல்லது சிங்கன் என்பதே இவ னது இயற்பெயராகச் சிறப்பிக்கப்பெற்றிருத்தலேக்கான