பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

பன்னிரு திருமுறை வரலாறு


லாம். இவனுக்குரிய மூன்று பெயர்களுள் ஒன்றை மட்டும் பிரித்துக் கூருமல் அவை மூன்றையும் உளப் படுத்திக்கூறும் முறையில் இவனது இயற்பெயராகிய சிங்கன் என்பதற்கு முன் இவன் பெற்ற வெற்றித். திறத்தை அறிவிக்கும் கழல் என்னும் அடைமொழியை யுஞ் சேர்த்துக் கழற் சிங்கன் என நம்பியாரூரர் சிறப் பித்துப் போற்றினராதல் வேண்டும்.

காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலிற் பொறிக்கப்பட்ட வடமொழிக் கல்வெட்டு இராசசிம்ம பல்லவனச் சிவசூடாமணியென்று புகழ்ந்து போற்றுகின்றது. ' இவ்வாறே மாமல்லபுரத்தில் அமைந்த இராசசிம்ம பல்லவேச்சுரக் கல்வெட்டும் பனேமலேக் கோயிலிலுள்ள கல்வெட்டும் இவனேச் சிவசூடாமணியென்றே சிறப்பித் துரைக்கின்றன. பரமேச்சுரனே இராசசிங்கப் பல்லவ. கை அவதரித்துள்ளாரென்று காசாக்குடிச் செப்பேடு கூறுகின்றது. இவ்வேந்தனேப் பரம மாகேச்சுரனென உதயேந்திரச் செப்பேடு உயர்த்துப் போற்றுகின்றது." இவன் காஞ்சியிற் கயிலாயத்தை யொத்த பெருங் கோயிலொன்றை யமைத்துச் சிவபெருமானே வழிபட்ட பெருமையுடையவனென்பது வேலூர்ப் பாளையம் செப்பேட்டிற் கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டாம் நரசிம்மவர்மன் காஞ்சிமா நகரில் எடுப்பித்த கயிலாச நாதர் திருக்கோயிலில் இவனுக்கு அந்நாளில் வழங்கிய இரு நூற்றைம்பது பட்டங்கள் பொறிக்கப்பெற்றுள்ளன.” அவற்றுள் சங்கரபக்தன் ஈசுவரபக் தன் சைவ

1. தென்னிந்தியக் கல்வெட்டு, தொகுதி I, எண் 24.

露。 6് GrøờT 3i, Epigraphi indica, Vo}. XIX, No. 18.

3. தென்னிந்தியக் கல்வெட்டு, தொகுதி 11, எண் 78.

4 ്ക്ട எண் 74.

5, விடி எண் 98.

6. ബട്ടു. தொகுதி எண் 25.