பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 381

வாகும். இவற்றுள் இறுதியிற் குறிக்கப்பட்ட வடசொற் ருெடர் சைவசித்தாந்த நெறியைப் பின்பற்றியவன் என்ற பொருளேத் தருவதாகும். துஷ்யந்தன் முதலான அரசர்கள் தெய்வமொழியைக் கேட்டார்க ளென்பதில் வியப்பில்லே, நற்குணங்கள் பறந்தோடிப் போன இக்கலியுகத்தில் அத்தகைய அசரீரியை புரீ-பரன் (இராசசிம்மன்) கேட்டது வியப்பைத் தருவதே" எனக் காஞ்சிக் கயிலாயநாதர் கோயிலிற் பொறிக்கப்பட்ட வடமொழிக் கல்வெட்டுக் கூறுதலால் இவ்வேந்தர் பெருமான் இறைவனது திருவாக் காகிய அசரீரியைக் கேட்டு மகிழ்ந்த பெருமையுடையவ னென்பது உய்த்துணரப்படும். இவ்வாறு இராசசிம்ம கிைய கழற்சிங்கன் அசரீரி கேட்ட வரலாற்றை ஆசிரியர் சேக்கிழார், பூசலார் தாயனர் புராணத்தில் தெளிவாக விரித்துக்கூறியுள்ளார். காடவர் கோமா கிைய வேந்தன் காஞ்சியில் சிவபெருமானுக்குக் கருங் கல்லினுற் கோயில் அமைத்துச் சிவலிங்கப் பெருமானே அங்குத் தாபிக்கக் கருதிய நல்ல நாளில் திருநின்ற ஆரில் வாழ்ந்த மறையவராகிய பூசலார் நாயருைம் தாம் பல ஆண்டுகள். நினேந்து மனத்தினுல் அமைத்த மனக்கோயிலில் இறைவனே எழுந்தருளச் செய்வதற்கு எண்ணி நிச்சயித்தாரென்பதும், பூசலாரது மனக் கோயிலில் முதன் முதல் எழுந்தருளக் கருதிய சிவ பெருமான் அதற்கு முதல்நாள் இரவிலே பல்லவ மன்னன் கனவிலே தோன் றிக் காஞ்சியிலமைத்த கற்றளிக்குக் கடவுள் மங்கலம் செய்யக் குறிப்பிட் டிருந்த அந்நாளே மாற்றி வேருெரு நாளில் அதனே ச் செய்யும்படி அ றி வு று த் தி மறைந்த ரென்பதும் வரலாறு.

'காடவர்கோமான் கச்சிக் கற்றளியெடுத்து முற்ற

மாடெலாஞ் சிவனுக்காகப் பெருஞ்செல்வம் வகுத்தல்

செய்வான்