பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

பன்னிரு திருமுறை வரலாறு


நாடமா லறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்ள்ை ஏடலர் கொன்றைவேய்ந்தார் இரவிடைக் கனவிலெய்தி. நின்றவூர்ப் பூசலன்பன் நெடிதுநாள் நினேந்துசெய்த நன்று நீடாலயத்து நாளே நாம் புகுவோம் நீயிங் கொன்றியசெயலே நாளையொழிந்து பின் கொள்வாயென்று கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்

உருளப் போந்தார். என வரும் பூசலார் நாயனர் புராணச் செய்யுட்களால் இதனே நன்குணரலாம். காஞ்சியிலுள்ள கபிலாசநாதர் கோயிற் கல்வெட்டையும் பூசலார் நாயனர் புராணத் தையும் உடன் வைத்து ஆராய்வார்க்குப் பூசலார் புரா னத்திற் கச்சிக் கற்றளியெடுத்தவனுகக் கூறப்படும். காடவர் கோமானும் காஞ்சிக்கயிலாய நாதர் திருக் கோயிலேக் கட்டிய இராசசிம்ம பல்லவனும் ஒருவனே யென்பது நன்கு விளங்கும்.

இதுகாறும் கூறிய செய்திகளால் இராசசிம்மனென் னும் இப்பல்லவ வேந்தன் ஈடும் எடுப்புமற்ற சிவபத்த கைத் திகழ்ந்தவ னென்பது நன்கு தெளியப்படும். சிவபெருமான் பால் த ல் லே ய ற் ற பேரன்பினேச் செலுத்திய இப்பல்லவ வேந்தனேயே சுந்தரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிக த்தில் ' கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற் சிங்கன் அடியார்க்கும் அடியேன்”. எனப் போற்றினரெனக் கொள்ளுதல் பெரிதும் பொருத்த முடையதாகும், ஆகவே தம் காலத்தில் அரசு புரிந்த பெரு வேந்தனுகச் சுந்தரராற் பாராட்டப் பெற்ற காடவர்கோன் கழற்சிங்கன் என்பான் காஞ்சிமா நகரிலிருந்து கி. பி. 690 முதல் 720 வரை ஆட்சிபுரிந்த பல்லவவேந்தணுகிய இரண்டாம் நரசிங்கவர் மனே யென்பது நன்கு துணியப்படும்.

நம்பியாரூரரை அன்பினல் மகன் மைகொண்டு வளர்த்தவர் திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு