பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

பன்னிரு திருமுறை வரலாறு


அங்குள்ள கல்வெட்டுக்களுள் ஒன்று தெரிவிக்கின்றது : விக்கிரமசோழன் மகனுகிய இரண்டாங் குலோத்துங்க சோழன் தில்லைச் சிற்றம்பலத்தையும் பிறவற்றையும் பொன் வேய்ந்தான் என்று இராசராச சோழனுலா உணர்த்துகின்றது. ”

இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குமிடத்து, சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் தில்லைச் சிற்றம்பலம் பன்முறை பொன் வேயப்பெற்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனும். ஆனல் அதனே முதலில் பொன் வேய்ந்த சோழ மன்னன் முதலாம் ஆதித்தனேயாவன் என்பது நம்பியாண்டார் நம்பி யின் திருவாக்கினுல் வெளியாகின்றது. இப் பெரியார் தம் காலத்தில் இவ்வேந்தன் அவ்வரும் பணியாற்றிய காரணம் பற்றி அச்செயலேத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் பாராட்டியுள்ளனர் என்பது தெள் ளிது. இவர் சிதம்பரத்திற்கு அண்மையிலுள்ள திருநாரையூரிலிருந்தவராதலின் இவ்வரசன் தில்லே யிற்புரிந்த அத்திருத் தொண்டில் தாம் நேரிற் கலந்து கொண்டு அதனே அறிந்திருத்தலும் இயல்பேயாம்.

ஆகவே, நம்பியாண்டார் நம்பி இவன் ஆட்சிக் காலமாகிய கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதி யிலும் பத்தாம் நூற்ருண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும். இக் கவிஞர் பெருமான் அந்நூலிலுள்ள 82-ஆம் பாடலில் இவன் சிவபெருமான் திருவடி நீழலெய்திய செய்தியையும் குறிப்பிடுதலால் இவனுக்குப் பிறகு கி. பி. 907-ல் பட்டம் பெற்ற இவன் புதல்வன் முதற்பராந்தக சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சில ஆண்டுகள் வரையில் இருந்திருத் தல் கூடும்.

இனி, ஆதித்தன் சிங்கள நாடு வென்ற செய்தி யொன்று நம்பியாண்டார் நம்பியால் திருத்தொண்டர்

1. íbid. VoL. IV, No. 225. 2. இராசராச சோழனுலா, வரிகள் 59.66.