பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 383

திருமுனைப்பாடி நாட்டை ஆட்சிபுரிந்த குறுநில மன்ன சாகிய நரசிங்க முனேயரையர் எனப் பெரிய புராணம் கூறும். முற்காலத்தில் பேரரசர்கள் தமக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர்க்கும் அமைச்சர், படைத் தலேவர் முதலாயினர்க்கும் பட்டங்கள் வழங்கிச்சிறப்புச் செய்யுங்க ல் தம் பெயர்களோடு இணைக்கப்பெற்ற பட்டங்களேக் கொடுப்பது பெருவழக்காயிருந்தது. இவ்வுண்மை கல்வெட்டுக்களே ஆராய்ந்து பார்த்தால் இனிது விளங்கும். முனேயரையன் என்ற சிறப்புப் பெயரின் முன் அதனே வழங்கிய நெடுமுடி வேந்த கிைய நரசிங்கனது பெயரும் இணைக்கப் பெற்ற நிலே யில் வழங்கிய பெயரே நரசிங்க முனையரையன் என்ப தாகும். ஆகவே சுந்தரமூர்த்தி சுவாமிகளே இளம் பருவத்திலே வளர்த்துப் போற்றிய நரசிங்க முனே யரையர் என் பார், இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவ னுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னரென்பது நன்கு தெளியப்படும். எனவே இவரால் ஆதரித்து வளர்க்கப்பெற்ற சுந்தரர் இரண்டாம் நரசிம்மவர்மனு கிய இராசசிம்மன் காலத்தவரென்பதும் உறுதியாதல் காணலாம். சுந்தரருடன் கயிலேக்குச் சென்ற கழறிற் றறிவாராகிய சேரமான் பெருமாள் வாழ்ந்த காலமும் சுந்தரர் காலத்தில் உடனிருந்தவர்களாகிய சோமாசி மாறர் , விறன்மிண்டர், மானக்கஞ் சாறர், ஏயர்கோன் கலிக் காமர், பெருமிழலேக் குறும்பர், கோட்புலியார் , பூசி லார், செருத்துணேயார் என்னும் நாயன்மார்கள் வாழ்ந்த காலமும் இதுவேயாகும். இம்முடியினத் திரு வாளர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார்வர்கள் தமிழ்ப் பொழில் மூன்ருந் துணரில் எழுதிய சுந்தரமூர்த்தி களது காலம் என்ற கட்டுரையிலும் செந்தமிழ் 44 - ம் தொகுதியில் எழுதிய கொல்ல ம் ஆண்டு, என்ற

கட்டுரையிலும் .ெ த ரி வ க விளக்கியுள்ளாக் கள்.