பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

பன்னிரு திருமுறை வரலாறு


திருவாளர் ராவ்சாகிப் மு. இராகவையங்காரவர்களது கொள்கையும் இதுவேயாகும்."

இனி, சுந்தரர் வாழ்ந்தகாலம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதியாகுமெனத் தஞ்சை ராவ்பக தூர் சீநிவாச பிள்ளையவர்கள் தாமெழுதிய தமிழ் வரலாறு என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார்கள். திருவாங்கூரில் கல்வெட்டா ராய்ச்சித் துறைத் தலைவரா யிருந்த T. A. கோபிநாத ராயரவர்கள் சுந்தரர து காலம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இடைப்பகுதி யாகுமென்று செந்தமிழ் மூன்ருந் தொகுதியில் வரைந் துள்ளார்கள். சுந்தரர் குறித்த கழற்சிங்கன் என்பான் கி. பி. 830 முதல் 354 வரை ஆட்சிபுரிந்த தெள்ள று: எறிந்த நந்திவர்மன் என டாக்டர் மா. இராசமாணிக் கரைவர்கள் கருதுவர். இன்னேர் தமது முடிபுக்கு ஆதாரமாகக் காட்டும் காரணங்களே முறையே ஆராய் வோம்.

(1) சுந்தரமூர்த்திகளும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர் என்பது பெரியபுராணத்தால் நன்கறி யப்படும். திருவாலவாயில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள் தன்பால் அன்புடைய பாணபத்திரருக்குத் திருமுகப் பாசுரம் பாடிக்கொடுத்து அ வ ைர ச் சேரமான் பெருமாளிடத்து அனுப்பினரென்று பெரிய புராணமும் ேவ ம் ப த் து; ர ர் திருவிளேயாடலும் தெளிவாய்க் கூறுகின்றன. சேரமான் பெருமாள் காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன் வரகுண னென்னும் பெயருடையவனென்பது பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலால் நன்கறியப்படும். அந் நூலில் வரகுணன் என்ற பெயருடன் பாண்டியன் ஒருவனே குறிக்கப்படுதலால் அவ்வரகுணன் முதலாம் வரகுணனுகவே இருத்தல்வேண்டும். இவன் கி. பி.

1. ஆழ்வார்கள் கால நிலை 135, 136-ம் பக்கங்களில் அமைந்த அடிக்குறிப்பினை நோக்குக.