பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 385

840-க்கு முன் ஆட்சிபுரிந்தவனென்று கொள்வது பொருந்தும் என்பது அன்னேர் கூறும் காரணங்களுள் ஒன்ருகும்.

சுந்தரரும் சேரமான் பெருமாளும் திருவாலவா யிறைவரை வழிபடுதற் பொருட்டு மதுரைக்குச் சென்றி ருந்தபொழுது பாண்டியமன்னனும் அவனுடைய மகளே மணந்து அங்கு விருந்தாக வந்திருந்த சோழனும் அவ் விருபெருமக்களேயும் வரவேற்று உபசரித்தனரெனவும் சேர சோழ பாண்டியர்களாகிய அம்மூவேந்தருடன் சுந்தரர் திருப்பரங்குன்றத்தில் இறைவனேப் பாடிப் போற்றினரெனவும் சேக்கிழார் கூறுவர். சுந்தரரையும் சேரமான் பெருமாளேயும் வரவேற்றுப் போற்றிய பாண்டியன் இன்ன பெயருடையவனென் ருே அவன் மருகனுக வந்து தங்கிய சோழமன்னன் பெயர் இது வென் ருே சேக்கிழார் குறிப்பிடவில்லே. சேக்கிழார்க்குப் பன்னூருண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய பரஞ்சோதி முனிவரே சேரமான் பெருமாள் காலத்தவன் வரகுண பாண்டியன் எனக் கூறுகின்ருர். மிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவராகிய அவரது கூற்றை வரலாற்றுச்சான் றென அவ்வாறே ஏற்றுக்கொள்ளுதல் பொருந்தாது. சம்பந்தரால் வெப்பு நோயினின்றும் காப்பாற்றப் பெற்ற பாண்டியன் கூன் பாண்டியகுகிய சுந்தரபாண் டியனென்றும் இவனுக்குப் பத்துத் தலைமுறைகட்கு முந்தியவன் அரிமர்த்தனபாண்டியனென்றும் அரிமர்த் தனபாண்டியற்கு நாற்பத்துமூன்று தலைமுறைகட்கு முற்பட்டவன் வரகுண பாண்டியனென்றும் இப் பரஞ்சோதி முனிவரே தாமியற்றிய திருவிளையாடற் புராணத்திற் குறிப்பிட்டுள்ளார். அவர் கூற்றினே யுண்மையெனக் கொண்டால் திருஞானசம்பந்தப் பிள்ளே யார் காலத்தவனுகிய சுந்தரபாண்டியனுக்கு ஐம்பத்துமூன்று தலைமுறைகட்கு முன்பு ஆட்சிபுரிந் தவன் சுந்தரர் காலத்தவனுகச் சொல்லப்படும் வரகுண பாண்டியனெனக் கொள் ள வே ண் டி வரு ம். ஞான சம்பந்தர் இறைவன் திருவடிகளிற் கலந்து மறைந்த சில ஆண்டுகள் கழித்து இந்நிலவுலகிற் பிறந்