பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

பன்னிரு திருமுறை வரலாறு


தருளிய சுந்தரரைச் சம்பந்தர்க்குப் பன்னுருண்டுகள் முற்பட்டு வாழ்ந்தவராக மயங்கக் கொள்ளுமாறு அமைந்த பரஞ்சோதி முனிவரது திருவிளையாடற் புராணத்தை வரலாற்றுச் சான்றென நம்பிச் சுந்தரர் வாழ்ந்த காலம் இதுவெனத் துணி த ல் வரலாற்ரு ராய்ச் சிக்குச் சிறிதும் ஏற்புட்ையதன்ரும்.

(2) சேரமான் பெருமாள் சுந்தரருடன் கயிலே சென்றனரெனப் பெரிய புராணம் கூறும். இ வ. ர் மகமதிய மதத்தைத் தழுவி மக்காவுக்குப் போயினு சென்று மலேயாளத்தில் ஒரு கதை வழங்குகின்றது. இவர் ஆட்சியை விட்டுச் சென்றது முதலாகவே கொல்லம் ஆண்டு துவங்கி எண்ணப்பட்டு வருகின்ற தென்பர். கொல்லம் ஆண்டின் துவக்கம் கி. பி. 825-ம் ஆண்டாதலால் அவ்வாண்டின் தொடக் கத்தில் ஆட்சியைத் துறந்து சென்றவராகச் சொல்லப் படும் சேரமான்பெருமாளும் அவருடன் திருக்கயிலே சென்றவராகக் கூறப்படும் சுந்தரரும் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவராதல் வேண் டும் என்பது அவர்கள் கூறும் மற்ருெரு காரணமாகும்,

கொல்லம் ஆண் டென்பது, தமிழ்நாட்டின் பகுதி பாகிய பழைய கொல்லம் கடல் கோளால் அழி வெய்திய பிறகு கடற்பெயர்ச்சியால் சேரநாட்டில் தோன்றிய புதிய நிலப்பகுதிக்குக் கொல்லம் என்ற அப்பழைய பெயரையமைத்து அங்கு ம க் க ள் குடியேறிய ஆண்டு முதலாக எண்ணப்பட்டு வருவ தாகும். .ெ த ல் க ப் பி ய ச் சொல்லதிகாரத்தில், ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என வரும் சூத்திரவுரையுள் கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின் குமரியாற்றிற்கு வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் கு டி யே ற் றி ன ர் போலும்” எனத் தெய்வச்சிலேயார் கூறும் உரைக்குறிப் பாலும் கொல்லம் தோன்றி இருநூற்றைம்பத்தி ரண்டாம் ஆண்டு ' எனவும், கொல்லம் தோன்றி

1. தொல், சொல், எச், 4, தெய்வச்சிலேயார் உரை,