பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

பன்னிரு திருமுறை வரலாறு


என வரும் பாடலில் தம் காலக் தில் அரசாண்ட பல்லவ வேந்தனுக்குச் சிற்றரசர் திறை செலுத்துவதை மறுப் பதற்கு இடமுண்டாகிய நிலைமையைக் குறிப்பிட்டுள் பிளார். இராசசிம்ம பல்லவன் மிக்க பராக்கிரமசாலி. அவனது ஆட்சிக்குட்பட்டிருந்தவர்கள் அவன் பால் அ ன் பு ம் அச்சமுமுடையவர்களா யிருந்தார்கள். அவனுக்குத் திறை செலுத்துவதை மறுப்போர் எவரும் இருந்ததாக நினைப்பதற்கிடமில்லே. பல்லவராட்சி யில் இத்தகைய நிலேயேற்பட்ட காலம் தந்திவர் மனது ஆட்சிக் காலமேயென லாம். இவனது ஆட்சியில் இராஷ்டிரகூட அரசன் மூன்ரும் கோவிந்தன் என் பான் கி. பி. 804-ம் ஆண்டில் காஞ்சி நகரத்தின் மேற் படையெடுத்து வந்து வெற்றி பெற்ருன், தந்திவர்மன் அவனுக்குத் திறை கொடுக்கும்படி நேரிட்டது. இதற்கு முன்னெல்லாம் தந்திவர்மனுக்குத் திறை செலுத்கி வந்த சிற்றரசர்கள், இவனது தோல்வி நிலே அறிந்து திறை கோடாது மறுப்பதற்கு இடமுண்டாயிற்று. இந் நிலேயினையே சுந்தரர் குறிப்பிடுகின் ருர். இவ் வேந்தன் திருச்சிராப்பள்ளி ஜில்லா ஆலம்பாக்கம் என்ற ஊரில் கயிலாசநாதர் திருக்கோயிலேக் கட்டியுள் ளான், அக்கோயிலில் இவனுல் பிரதிட்டை செய்யப் பெற்ற சிவலிங்கத்தின் திருவுருவம் தந்திலிங்கம் என இவன் பெயரால் வழங்கப்பெறுகின்றது. இக்குறிப்பு இவனது சிறந்த சிவபத்தியை விளக்குவதாகும். சுந்தர மூர்த்தி சுவாமிகள் இப்பல்லவ வேந்தன் பொருட்டுப் பரிந்து தில்லேப்பெருமானே வேண்டியதற்கு இவனது சிவபத்தியே சிறந்த காரணமாகும் என்பது அவர்கள் கூறும் மற்ருெரு காரணமாகும்.

மேற்காட்டிய தில்லேயம்பலத் திருப்பதிகத்தில் தம்காலத்துப் பல்லவ வேந்தன் போர் வலிமை யற்றவனென்ருே அவனுக்குக் குறுகில மன்னர்கள் திறைகொடுக்க மறுத்தார்களென் ருே சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடவேயில்லே. தில்லேயம்பலப் பெரு மான், தன் பால் அன்புடைய பல்லவ மன் ைனேச் சார்ந் தோர்க்கு அருள்புரிபவராகவும், அவ்வேந்த ைேடு