பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 389

முரணிப்பகைஞராயினர்க்குக் கடுந்தண்டம் விதிப்பவ ராகவும் விளங்குங் திறத்தை விரித்துரைப்பதே இத் திருப்பாடலாகும். இதல்ை தம் காலத்தில் ஆட்சி புரிந்த பல்லவவேந்தனது ஒப்புயர்வற்ற சிவபத்தியின் மாட்சியையும்.அதன் பயணுக அவ்வேந்தனுக்குண்டா கிய வெற்றிச்சிறப்பையும் உலகமக்களுக்கு அறிவுறுத்து வதே நம்பியாரூரரின் உளக் கருத்தாதல் நன்கு பெறப் படும். இத்தகைய சிவபத்திச் சிறப்பு இராசசிம்ம பல்ல வன்பால் அமைந்திருந்தமை அவன் எடுப்பித்த காஞ் சிக் கயிலாசநாதர் கோயிலிற் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டால் உறுதிப்படுதலாலும், சுந்தரர் தம் காலத் துப் பல்லவவேந் தனது வெற்றிப்பெரும்புகழ் மண்ணு லகமெல்லாம் பரவிய திறத்தையும் அவனது ஆட்சியின் கீழ்க் கடல. ற் சூழப்பட்ட இந் நிலவுலகத்தின் பெரு நிலப்பரப்பு அடங்கி அமைதியுற்ற செம்மையையும் 'பாரூர் பல்லவனுர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச் சீருரும் புறவிற் றிருமேற்றளிச் சிவன’’ எனவும்

"கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன்?? எனவும் வரும் தொடர்களால் முறையே குறிப்பிடு த லாலும் அவர் காலத்தில் ஆட்சிபுரிந்த பல்லவன் இராச சிம்மன் எனக்கொள்ளுதலே ஏற்புடையதென்க.

4. கழற்சிங்கநாயனர் புராணத்தில் அவ்வேந்த ருடைய பட்டத்த ரசியைக் குறித்துச் சேக்கிழார் கூறும் கூற்றிலிருந்து அவள் செய்த தவறுகள் இரண்டென்று தெரிகிறது. ஒன்று, வேந்தன் திருவாரூர்ப் பெருமானே வணங்கும்பொழுது உ ட னி ரு ந் து வணங்காமை' மற்றென்று, பூமாலே கட்டும் மண்டபத்தின் அருகே யிருந்த புதுமலர் இறைவனுக்கு மாலேயாகத் தொடுத் தணிதற்குரிய தென்றும் கோயிலிலுள்ள மலரை மோத்தல் முறையன்றென்றும் கருதாது அம்மலரை யெடுத்து மோந்தமை. இராசசிங்கனுடைய பட்டத்