பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 39 |

இவளும் தன் கணவனைப் போன்று சிவனெறியிற் கொண்ட பற்றுக் காரணமாகத் திருவாரூர்த் திருக் கோயிலை யிறைஞ்சுதற்கு வந்தவளென்பதும் நன்கு புலனுதல் காணலாம். ஆகவே இச்செய்தியை ஆதார மாகக் கொண்டு தெள்ளாறெறிந்த நந்திவர்மனக் கழற்சிங்கநாயனர் எனக் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தா தென்க.

பாட்டுடைத் தலைவனுகிய வேந்தனே வீரக் கழலணிந்தவனென்றும் அரசருட் சிங்கம் போன்றவ னென்றும் தம் நூல்களிற் போற்றிப் புகழ்தல் நூலாசிரி யர் அனேவர்க்கும் பொதுவாக வுரிய புல ைம மரபாகும்: அம்மரபின்படி அறைகழல் முடித்த அவனி நாரணன் எனவும் குரைகழல் வீரநந்தி’ எனவும் பல்லவர் கோன் அரி எனவும் வரும் நந்திக் கலம்பகத் தொடர் களில் தனித்தனியே கூறப்பட்ட கழல்’ என்ற சொல்லேயும் அரி யென்ற சொல்லேயும் கழலரி என ஒன்ருகக் கூட்டி அந்நூலின் பாட்டுடைத் தலைவகிைய நந்திவர்மனே சுந்தரராற் போற்றப்பெற்ற கழற்சிங்க நாயனர் எனத் துணிந்து கூறுதல் வரலாற்று முறையன்றென்பதே அறிஞர் துணிபாகும். தெள்ளா றெறிந்த நந்திவர்மனுக்கு கழற்சிங்கன் என்னும் பெயர் வழங்கியது உண்மையாயின் அப்பெயரை நந்திக் கலம்பக ஆசிரியரே தம் நூலில் தெளிவாகக் கூறியிருப்பார். அந்நூலில் ஒரிடத்திலேனும் கழற் சிங்கன் என்ருே சிங்கன் என் ருே பெயர் கூருது நந்தி யென்பதனேயே அவனது இயற்பெயராகக் குறிப்பிட் டுள்ளார். எனவே சுந்தரராற் போற்றப்பெற்ற கழற் சிங்கனே நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவ கைக் கொள்ளு தற்குச் சிறிதும் இயைபில் லே யென்பது நன்கு தெளியப்படும். சிவனடியார்களே அவரவர்க் குரிய சிறப்புடை யியற்பெயராற் குறிப்பிட்டுப் போற்றும் திருத்தொண்டத் தொகையிற் கூறப்பட்ட கழற்சிங்கன் என்ற பெயரை வெறும் புனேபெயராகக் கொள்ளுதல் பொருந்தாது. தம் காலத்தில் ஆட்சி