பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகண்ட சோழன் 23

திருவந்தாதியிற் சொல்லப்பட்டுள்ளது.அதனே உறுதிப் படுத்தக்கூடிய வேறு சான்றுகள் இந்நாளிற் கிடைக்க வில்லை. எனினும், அதனே எளிதாகத் தள்ளிவிட இயலவில்லே. சோழர் பேரரசை நிறுவும் பொருட்டு வடக்கும் மேற்கும் படையெடுத்துச் சென்று முறையே தொண்டை மண்டலத்தையும் கொங்கு மண்டலத் தையும் கைப்பற்றித் தன் ஆளுகையின் கீழ்க்கொண்டு வந்த இம்மன் னர் பிரான், தென் கிழக்கேயுள்ள சிங்கள நாடாகிய ஈழமண்டலத்தின் மேலும் படையெடுத்துச் சென்றிருத்தல் கூடும். இவன் புதல்வன் முதற் பராந்தக சோழன் அந்நாட்டின் மேல் படையெடுத் துச் சென்று அதனேக் கைப்பற்றினன் என்பது, அவன் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எ ன .ே வ ஆதித்த சோழன் முதலில் தொடங்கிய அச்செயலே அவன் புதல்வன் தன் ஆட்சியில் நிறைவேற்றி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, ஆதித்தனது சிங்கள நாட்டுப் படையெழுச்சியைப்பற்றி நம்பி யாண்டார் நம்பி கூறியிருப்பது சிறிதும் புனேந்துரை யாகா தென்க.

நம்பியாண்டார் நம்பி முதலாம் இராசராச சோழனேத் தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி யிற் குறிப்பிடாமை யொன்றே இவர் அவ்வேந்தன் காலத்தவரல்லர் என்பதை நன்கு புலப்படுத்துவ தாகும். இந்நிலையில் திருமுறைகண்ட புராணத்தில் தெளிவின்றியமைந்துள்ள இராசராச அபய குலசே கரன் என்ற தொடர், முதல் இராசராச சோழனே க் குறிக்குமென்று கருதுவது பொருத்தமுடையதாகத் தோன்றவில்லே. அன்றியும், முதல் இராசராச சோழன் என்பான் நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு சமயகுரவர் மூவர் திருப்பதிகங்களேயும் தேடிக்கண்ட ண ன் என்னுங் கொள்கைக்கு முரணுக, அவ்வேந்த னுடைய முன்னேர்களான முதல் ஆதித்தன், முதற் பராந்தகன், உத்தம சோழன் ஆகிய சோழ மன்னர் களின் ஆட்சிக் காலங்களிற் கோயில்களில் மூவருடைய