பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 395

மன்னு மழைபொழிந் தீரறு வேலிகொண் டாங்கவற்றே பின்னும் பிழைதவிர்த் தீரறு வேலிகொள் பிஞ்ளுகனே."

ன்னவரும் கோயிற் றிருப்பண்ணியர் விருத்தத்தாலும் கோட்புலிநாயனர் வரலாற்ருலும் வ லி யு று த ல் காrைலாம் ,

இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் தம் காலத்து வேந்த கைப் போற்றப்பெற்ற காடவர்கோன் கழற்சிங்கன்’ என்பான் கி. பி. 696 முதல் 726 வரையில் ஆட்சி புரிந்த இரண்டாம் நரசிம்மவர்மனுகிய இராச்சிம்ம பல்லவனே என்பது நன்கு புலனுதலின் கி. பி. ஏழாம் நூற்ருண்டின் பிற்பகுதியும் எட்டாம் நூற்ருண்டின் தொடக்கமுமாகிய காலப்பகுதியே சுந்தரரும் அவர் தம் உயிர்த்தோழர் சேரமான் பெருமாள் நாயனரும் வாழ்ந்த காலமென்பது நன்கு துணியப்படும்.